புயல்
கடந்தபின்
சேதம் என
சொல்வதுண்டு ...
கடந்தபின்
சேதம் என
சொல்வதுண்டு ...
இதென்ன
உன்னை
பார்த்தபின்
நேரம்
போதவில்லை
என்கிறதே
கடிகாரம் ?
மழை
பெய்தபின்
மண்
மணக்கும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
உன்
காலடித்
தடத்திற்கே
வாசம்
வீசுகிறதே ?
நிலா
வந்தபின்
இரவு
அழகாகும்
என்று
சொல்வதுண்டு ...
வாசம்
வீசுகிறதே ?
நிலா
வந்தபின்
இரவு
அழகாகும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
அமாவாசை
அன்று
இரவு
அழகாகிறதே ?
வானவில்
மழைக்குப்
பிறகுதான்
வரும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
வெயில்
காலத்தில்
வானவில் ?
பாதை
நீண்டால்
பயணம்
சோர்வாகும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
உன்னோடு
பயணிக்கும்
பாதைகளெல்லாம்
நொடியில்
முடிந்து
விடுகிறதே ?
தண்ணீர்
தாகம்
தீர்க்கும்
என்று
சொல்வதுண்டு ...
தண்ணீர்
தாகம்
தீர்க்கும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
உனது
தாகத்திற்கு
மேகமே
இறங்குகிறதே ?
நெருப்பு
தொட்டால்
சுடும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
உனது
பார்வை
பட்டாலே
கொதிக்கிறதே ?
கண்ணாடிதான்
முகம்
காட்டும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
உன்
கண்கள்
என்
வாழ்க்கையையே
காட்டுகிறதே ?
காதல்
வந்தபின்
கவிதை
பிறக்கும்
என்று
சொல்வதுண்டு ...
இதென்ன
காதலே
கவிதையாகி
நடக்கிறதே ?
No comments:
Post a Comment