Friday, July 24, 2026

பருவக்காற்று வீசுது

பருவக்காற்று 
வீசுது 
பல கதைகள் 
பேசுது.
நிலவில் 
நீர் இருக்கிறதா 
என்று 
ஆராய்ச்சி 
செய்கிறார்கள் !

நீரின்றி 
ரெண்டு 
கெண்டை மீன்கள் 
எப்படி 
துள்ளும் ?
தங்கச்சிலை 
ஒளிரும்  ..

அதன் 
நிழல் 
எப்படி 
ஒளி வீசும் ?
இதழ்கள் 
கவி பாடும் ...

கண்கள் 
எப்படி 
கவி பாடும் ?
உருவமில்லா 
ஒருவன் 
எப்படி 
கண்ணை 
படைத்தான் ?

கண்ணுக்குள் 
உலகை 
எப்படி 
காண வைத்தான் ?
உன்னை 
கண்டதும் ..

ஆசை முன் 
சென்றதா ?
மனம் முன் 
சென்றதா ?

எப்படி 
கண்டறிவது ?
இதழ் மது 
போதை 
தரும் ...

கொலுசொலி 
எப்படி 
போதை 
தரும் ?
வானில் 
உதிக்கும்  
விண்மீன்களை 
எண்ணி விடலாம் ...

மனதில் 
உதிக்கும்  
உனது 
எண்ணங்களை 
எப்படி 
எண்ணுவது ?
இரண்டே
நிறங்கள்தான்
உன்
விழிகளுக்கு...

என்
மனவானில்
வானவில்லை
எப்படி
பூக்க
வைக்கிறதோ!
உனது
விழிப்
போதையிலேயே
மயங்கி
கிடக்கிறது
என்
இதயம்...

உன்
கனவுகளை
அது 
எப்படி
தாங்குமோ!

No comments:

Post a Comment