வியர்க்கிறதென
மரத்தடியில்
ஒதுங்கி விட்டாய் ...
மரத்தடியில்
ஒதுங்கி விட்டாய் ...
வியர்க்கிறது பார் ..
உன்னைத் தழுவிய
தண்ணீரெல்லாம்
நீராடியது
உன் அழகில்தான்!
ஆற்றில்
மூழ்கி
கரை ஏறி விட்டாய் ..
உன் அழகிலேயே
இன்னமும்
மூழ்கி கிடக்கிறது
ஆறு !
காற்றுதான் ..
தென்றலாகி விட்டது ..
உன்
இதயம்
நுழைந்து வருவதால் !
நெருப்பு மூட்டி
குளிர் காய்கிறாய் ..
உன்
அழகில்
குளிர் காய்கிறது
அனல் !
கடற்கரையில்
நடக்கிறாய் ...
அலைகள்
கரையைத்
தேடவில்லை...
உன்
காலடிகளைத்தான்
தேடுகின்றன !
ஈரமாகத்தானே
இருக்க வேண்டும் ?
உன் கூந்தலை
உலர்த்திய
காற்று !
ஏன்
தகிக்கிறது ?
நீ
பயணப்படும்
மலைகளெல்லாம் ...
மலைகளின்
ராணியாகி
விடுகிறது !
பனித்துளியை
தொட்டாய் ...
பனித்துளியை
தொட்டாய் ...
உன்
விரல்களின்
குளிர்ச்சியில்
நடுங்குகிறது
பனித்துளி !
No comments:
Post a Comment