விழியோர கவிதைகள்
விழிகளும் கார்த்திகை அகல்களோ - விண்ணில் மின்னும் அகல்களோ !
பார்த்தன் கையேந்தும் நாணும் - அவள் புருவம் கண்டு நாணும் !
காமன் மலர்கணைகள் அஞ்சும் - அவள் விழி அசைவிற்கு அஞ்சும் !
அவள் பார்வையில் பூக்குது ஊதாப்பூ வண்டு வந்து தினம் ஊதா பூ !
நெஞ்சில் பூக்க வைத்தாள் காதல் பூவை கண்களில் பூ விரித்த அந்த பூவை !
வந்தது மயிலொன்று எனை நாடி அதன் கண்களில் துடிக்குது எந்தன் நாடி !
விழியிரண்டும் வீசுது கூர் வேலை கவிதையில் வடிப்பதே என் வேலை !
No comments:
Post a Comment