Friday, December 31, 2021

நீ நிரப்பியிருப்பாய் வீட்டை

 

மாரை கிழிக்கிறது 

மார்கழி கனவுகள் 


வீட்டை நிறைக்கும் போட்டியில் ...

கௌரவர்கள் வைக்கோலை நிறைத்தார்கள் 

பாண்டவர்கள் தீபமேற்றினார்கள் 

நானாக இருந்தால் 

உன்னை குடியமர்த்தியிருப்பேன் 

நீ 

நிரப்பியிருப்பாய் வீட்டை 

காதலால் !


நீ 

விட்டுப் போன 

வழியிலேயே 

காத்திருக்கிறேன் ....

என்றாவது ஒரு'நாள் 

வழி தவறியாவது 

வர மாட்டாயா என !


படிப்பதெதுவும் 

மனதில் 

பதியவில்லை ...

மனதோடு 

நீ 

மனப்பாடமாகிப் போனதால் !


மேகத்தை 

கலைக்கும் காற்று போல 

என் சிந்தனைகளை 

கலைத்து போகிறது 

உனது நினைவு !


கடலலை அடிக்கிறது 

காற்று வீசுகிறது 

மழை பெய்கிறது 

சூரியன் சுடுகிறது 

நிலா குளிர்கிறது 

உன் நினைவும் அலைகிறது 

சென்ற வருடத்தை போலவே !


மன்னித்துவிடு ....

உன்னை எப்போதும்  

மறப்பதில்லையென 

என் இதயம் 

சபதமெடுத்திருப்பதால் 

புது வருடத்தில் 

உன்னை நினைப்பேன் என  

சபதமெடுக்க முடியவில்லை !


உளறல்களும் 

பிடித்து போகிறது 

உதிர்ப்பது 

உன் 

உதடுகள் என்றால் !


சுவாசிக்கும் முன்னே 

யோசிக்க 

ஆரம்பித்து விடுகிறது 

மனது ...


வாசிக்கும் முன்னே 

யாசிக்க 

ஆரம்பித்து விடுகிறது

இதயம் !


என் 

நாட்கள் ஒவ்வொன்றையும் 

முத்தாய் கோர்த்து 

மணியாரமாய் அணிந்து 

ஒய்யாரமாய் நடக்கிறாய் ...

வெறுமையாய் 

நடக்கிறேன் நான் !


எண்ணவில்லை 

நீ 

என் எண்ணமாக மட்டுமே 

ஆவாய் என்று !


எங்கோ இருந்து 

பனித்துளி 

நினைவுகளை தூவி 

குளிர வைக்கிறாய் ...


நினைவுகளுக்கு 

உருவமில்லை என்று 

யார் சொன்னது ...

என் நினைவுகளுக்கு 

உருவம் இருக்கிறது 

சந்தேகமானால் 

கண்ணாடியில் பார் !

 

மார்கழி மாதத்து 

நினைவுகள் ஒவ்வொன்றும் 

சித்திரை வெயிலாய் 

ஆடிக் காற்றாய் 

சிதறடிக்குது என்னை !



மாலை மயங்கும் வேளையிலே

மயிலாடும் சோலையிலே

மங்கை முகம் காணையிலே 

மனம் துடிக்குது உவகையிலே !


மார்கழி மாத பூக்களே 

வசந்த ராகம் இசைக்கையிலே 

தென்றல் தாளம் போடையிலே 

மனம் துடிக்குது மோகத்திலே  



Wednesday, December 29, 2021

நிலாபெண்ணா

 மேகப்பொம்மைகளை 

கலைத்து போட்டு 

விளையாடுவது யார் ...

தென்றல் குழந்தையா ...

நிலாபெண்ணா !


தென்றலும் 

புயலும் 

ஒரே நேரத்தில் !


கட்டெறும்பு 

கடத்தி செல்லும் 

சீனி போல 

கடத்தி செல்ல பார்க்கிறேன் 

உன் 

உதட்டோர 

பனித்துளியை !


https://pbs.twimg.com/media/Ecc-_KZUEAIZVGf?format=jpg&name=large



சொல்லாத வார்த்தைகள் 

உன் விழியில் 

இன்னும் மிச்சமிருக்கு ...

எழுதாத பக்கங்கள் 

என் டயரியிலும் 

இன்னும் மிச்சமிருக்கு !


மனக்கிளையில் 

கூடு கட்டி வைத்திருக்கிறேன் ...



வரப்பு மேல வனப்பு ...

வரம்பு மீறுது நெனப்பு !


உனது 

மாளிகை வாசலில் 

எனது காதல் ...

கோலமா ?

அலங்கோலமா ?


பின்னல் ஜடையை 

பின்னால் தூக்கி போட்டாய் ...

குஞ்சம் வைத்த சவுக்காய் 

வீசிப்போனது நெஞ்சில் !


Tuesday, December 28, 2021

கடலலை

 கடற்கரையில் 

அரசியல்வாதியின் சமாதி ...

இவரைப்போல் 

நாட்டை என்னால் 

அரிக்க முடியாதென 

தோற்று 

பின்வாங்கியது 

கடலலை !


கமிஷன் இன்றி 

தமிழ் நாட்டில் 

கட்டப்பட்ட 

ஒரே பாலம் 

ராமர் பாலம்தான் போலும் !


ஆளை பிடித்தார் 

காண்ட்ராக்ட் எடுத்தார் 

கமிஷன் கொடுத்தார் 

கட்டிங் எடுத்தார் 

ரோடில் எங்கே தார் !?


கோவிலுக்கு வந்தேன் 

உன்னை நினைத்தபடி 

உன்னை சுற்றினேன் 

வெளியே விட்ட 

செருப்பை நினைத்தபடி !


கண்ணனின் புகழ் 

பரவ வேண்டுமென்றால் 

சகுனியும் கூட 

பிறப்பெடுக்க 

வேண்டியிருக்கிறது !


Saturday, December 25, 2021

மாத்திரை

 வீட்டின் 

கன்னி மூலையிலுள்ள 

அறையில் படுத்தால் 

தூக்கம் நன்கு வருமாம் ...


அரசு அலுவகங்களில் 

எல்லா மூலையும் 

கன்னி மூலையோ !



அச்சமில்லை அச்சமில்லை 

அச்சமென்பதில்லையே 

உச்சி மீது வானிடிந்து ...


மனப்பாடம் செய்தான் மாணவன் 

நாளை ஆசிரியர் திட்டுவாரே 

என அஞ்சி !



காதலுக்கு  

கல்லறையை 

பரிசளிக்காதீர்கள் ...

இனிய இல்லறத்தை  

பரிசளியுங்கள் !


காதல் என்ற யாத்திரை

கண் மயக்கும் மாத்திரை

கண் மயக்கும் மா திரை

Friday, December 24, 2021

ஆட்சியெல்லாம் மதுரையிலே

கண்விழிகள் மூடிவைத்தால்

காண்பது உன் கோலம்

கவலையிலே எவ்வளவு நாள்

கழித்திருப்பேன் காலம்


துவளுகிறேன் அடி தளர்ந்து

துடிக்குதடி நெஞ்சம்

தேவி உன் பார்வை பட்டால் 

தொல்லை எல்லாம் அஞ்சும்


அபிநயத்தில் நின்ற இடம்

தென் குமரி எல்லையோ 

அஞ்சேல் என உன் கரங்கள்

அபயம் அளிப்பதில்லையோ 


காட்சியெல்லாம் தருவதற்கே

கடத்துகிறாய் மிக காலம் ...

ஆட்சியெல்லாம் மதுரையிலே 

ஆள்வதுதான் என்ன நியாயம் ...

மாட்சிமையாய் என் மனதை  

ஆள வருவாய் வருங்காலம் !


பூவிழிக்குள் விழுந்த பிம்பம் கோடி - உன்

பொன்உருவம் போல வருமோடி ..

பாவழிக்குள் தடம் பதிப்பவளே 

பதங்களால் பரதம் படிப்பவளே - என் 

நாவழிக்குள் வந்துதிப்பாயோ 

நல்ல தமிழ் நாளும் தாராயோ ...


தீபவிழி காட்டுதடி மாயம் - அதில் 

தீருமோ என் பிறவிக்காயம் 

ஆர்த்தெழும் மோகங்கள் தீராதோ 

அடைக்கலம் உன்னடி போதாதோ 

போதுமடி புவியில் என் வேஷம் - உன் 

கடைக்கண்ணால் அவியாதோ என் தோஷம்!

Tuesday, December 21, 2021

வில்லங்கமானது

 


ஆயிரம் பூக்கள் 

மலர்ந்தென்ன லாபம் ...

ஒரே ஒரு பூவில் 

மனம் செல்வதென்ன மாயம் !


வில் அங்கமான 

அவள் அழகில் 

வில்லங்கமானது மனது !


பூ போன்ற 

உன் நினைவுகள் 

எப்படி என் மனதில் 

கடுமையான தடம் பதிக்கிறது 

ரோடு ரோலர் போல !


உனக்காக 

மரத்தடியில் 

காத்திருந்து காத்திருந்து 

இப்போது 

மரம் கூட என்னை 

காதலிக்க தொடங்கிவிட்டது !


வானளவு 

உயர்ந்து நிற்கிறது 

உன் அழகு ....

ஏட்டளவில் 

அதனை எப்படி 

கிறுக்குவது 

என்று தெரியவில்லை !


இரண்டடியில் 

உலகளந்த பரந்தாமா ...

எப்படி அளப்பாய் 

யசோதையின் 

அன்பை !


இதுவும் கடந்து போகும் 

என்பது பொய்த்து போனது 

கடந்து போக நீ 

காற்று அல்லவே ...

பாதையே நீதானே !


கவிதை சொல்லி 

கழுத்தறுக்கிறேன் என்றாள் ...

நான் என்ன செய்வது 

சொல்லி தந்தது 

உன் விழிகள் தானே !


தொலைந்து போன 

காகிதங்களில் இருக்கிறது 

உனக்கான கவிதை !


உன்னோடு இருந்த நாட்கள் 

மட்டுமல்ல 

உன் நினைவோடு இருக்கும் 

இருக்கும் நாட்களும் 

அழகாகத்தான் 

இருக்கின்றன !


உன்னை தொட்டு 

சென்ற தென்றலை 

சிறை பிடிக்க ஆசை ...

வேறு யாரையும் 

அது 

தொட்டு விடும்முன் !


உன் உடல் தழுவிய 

காஞ்சி பட்டு 

தவித்து நிற்கிறது 

வெட்க பட்டு 


Thursday, December 16, 2021

பைத்தியம் ஆக்கியவள்

 மலரோடு 

ஆரம்பித்தாய் ...

மலர் வளையத்தில் 

முடிப்பாயோ !


பைத்தியம் மாதிரி 

பேசாதே என்றாள் 

பைத்தியம் 

ஆக்கியவள் !


என்னை 

மறக்க வைத்தாய் ...

என்னை 

ஏன் மறந்தாய் !


அதிகமானால் 

அமுதமும் நஞ்சாமே ...

உன்னை 

அளவு கடந்து 

காதலித்துவிட்டேனோ !


மௌனம் என்னும் 

வீணையைதானே 

மீட்டினாய் ...

எப்படி கேட்டது 

எனக்குள் 

காதல் கீதம் !

உன்னைப்போல

 செடியின் 

பூக்களை பறித்து 

கற்சிலைக்கு பூவலங்காரம் ...

செடியில் இல்லையோ 

எங்கும் நிறைந்தவன் !?


என்றோ 

நானெழுதிய கவிதை 

இன்றும் 

இளமையாகத்தான் 

இருக்கிறது 

உன்னைப்போல !


சிந்தும் மழைத்துளி 

சிரிக்குதடி 

அது உன்னோடு 

காதல் கொள்ளுதடி !


உன் புன்னகை தாண்டி 

உவமை சொல்ல 

உலகில் 

ஒன்றும் இல்லயடி !


எந்தன் வரிகள் பொய்யென்றால் 

கற்று தந்த 

உன் கண்களை 

என்ன செய்வாயடி !


Wednesday, December 15, 2021

வரலாறு

மொழியை வென்றவரை
கணிதத்தை வென்றவரை
புவியை வென்றவரை
அறிவியலை வென்றவரை
ஞாபகம் வைத்திருக்கிறது
வரலாறு !

எதுவுமில்லாமல் வந்தாய் 
எல்லாம் வேண்டுமென அலைந்தாய்
எதுவும் நிரந்தரமில்லையென உணர்வாய்
எல்லாவற்றையம் விட்டு ஒரு நாள் பறப்பாய்
எல்லாவர்க்கும் வாழ்க்கை இதுவென அறிவாய்


Friday, December 10, 2021

காளிதாசனே ... கண்ணதாசனே !

 உன்னிடம் 

எல்லாமே 

கவிதையாக தெரிகிறது  ..

என்னிடம் எதுவுமே 

கவிதையாகாமல் 

நழுவுகிறது !


உனக்கு 

விருந்தாக வந்த கவிதை 

எனக்கு 

பசியாகிப் போனது !


உனக்கு 

பூக்களம் போட்ட 

கவிதை 

எனக்கு 

போர்க்களம் 

அமைக்கிறது !


உனக்கு 

தாய்ப்பால் ஊட்டிய கவிதை 

எனக்கு 

கள்ளிப்பால் 

ஊட்ட முனைகிறது !


உன் கவிதை வானில் 

என்றும் பௌர்ணமி ..

என் 

கவிதை வானில்  

என்றும் அமாவாசை !


நினைக்கும் போதெல்லாம் 

கவிதையை பிரசவிக்க 

உன்னால் முடிகிறது ...

என் கவிதைகள் 

கர்பத்திலேயே 

கரைகிறது !


நீ 

எழுதுகோல் பிடித்தால் 

எரிமலை கூட 

பூக்களை தூவுகிறது ...

எனக்கோ 

பூந்தோட்டம் கூட 

தீமழை பொழிகிறது !


காய்ந்த சருகும் 

உன் கவிதையில் 

காதல் சின்னம் ஆனது ...

தாஜ்மகால் கூட 

என் கவிதையில் 

தடுமாறுகிறது !


புயல் காற்றையும்

எழுதுகோலில் 

நிரப்பி விட்டாய் ...

தென்றல் கூட 

என்னிடம் 

தெறித்து ஓடுகிறது !


கவிதைக் கடல் 

உன் 

குவளைக்குள் அடங்கி 

விட்டது ...

குவளை நீர் கூட 

என்னை 

மூழ்கடிக்கிறது !


உன் 

ஒரு வார்த்தையே  

காதலை

குளிர் காய

வைக்கிறது ...

என் நயமான வார்த்தைகளில் கூட

காதல்

கோபத்தில் 

வியர்க்கிறது !


உனது 

காதல் மாளிகையில் 

வார்த்தைகள் 

தென்றலாய் வீசுகிறது ...

எனது 

காதல் குடிசையை 

வார்த்தைகள்

புயலாய் கடக்கிறது !


உனது 

வார்த்தைகளில் கூட 

கவிதையை தேடும் உலகம் 

எனது கவிதையில் 

வார்த்தைகளை 

தேடுகிறது !


உனது 

கவிதை புறா 

தொடு வானில் 

சிறகடிக்கிறது ...

எனது 

கவிதை கழுகு 

தரையில் 

தள்ளாடுகிறது !


அவித்த 

நெல்மணிகள் கூட 

உனது 

புஞ்செய் நிலத்தில் 

கவிதையாய் 

முளைக்கிறது ...

விதை நெல் கூட 

எனது நஞ்செயில் 

கருகிப்போகிறது !


உன் மடியில்

பச்சை குழந்தையாய்

கொஞ்சி விளையாடும்

கவிதை 

எனது முன்னால்

பாசக்கயிறு வீசி

எமனாய் நிற்கிறது!


புரிகிறது 

நீ 

கவிதையை 

வரமாக 

வாங்கி வந்தவன் ...

நானோ 

அதனை 

சாபமாக 

வாங்கி வந்தவன் !






தெரியவில்லை

 விரலசைவு 

விழியசைவு 

ஏன் 

உனது 

முன் நெற்றியில் விழும் 

சிறு கேசம் கூட 

கவிதை சொல்கிறது ...

எனக்குதான் 

என்ன எழுதுவதென்று 

தெரியவில்லை !

காதல் புதிர்

புத்தாடைக்காகவும் 

பட்டாசுக்காகவும் 

இனிப்புகளுக்காகவும் 

எல்லோரும் 

பண்டிகையை எதிர்பார்த்து 

காத்திருக்கையில் 

நான் மட்டும் 

உனக்காக காத்திருக்கிறேன் !


நீ விடுமுறையில்  

ஊருக்கு'சென்ற பின்பு 

ரோஜாக்கள் பூப்பதில்லை

வானில் மேகங்கள் கூட 

கூடுவதில்லை  !


காலம் காட்டிய 

காதல் புதிர் 

உனது 

விழி அசைவில்தான் 

அவிழும் போலிருக்கிறது !


கடந்த காலத்தின் 

ஆதாரம் எதுவென 

நானறியேன் 

மீதமிருக்கும் நாட்களுக்கு 

நீ மட்டுமே ஆதாரமென 

உணர்வு சொல்கிறது !


சில கடன்களை

திருப்பி செலுத்தவே முடியாது 

நீ

என்னிடம் பட்ட

காதல் கடனையும்தான் !


நீ பேசிக்கொண்டே இரு ...

நான் கேட்டுக்கொண்டே 

நடக்கிறேன் ...

உன் ஒற்றை சொல் சிணுங்கல் கூட 

எனக்கு 

காவியமாகவே படுகிறது !

Thursday, December 9, 2021

ஆலகால நினைவுகள்

ஆறாத காயங்களை
ஆழ கீறி 
வழியும் குருதியை 
ஆசை தீர பருகி ... தன் 
ஆயுளை நீட்டித்து
ஆடிக்களிக்கிறது 
உந்தன்
ஆலகால நினைவுகள்...

Wednesday, December 8, 2021

மருந்தாக வருவாயோ ... இல்லை

தோல்வியை நான்

ஒப்புக்கொண்டபின்னும் 

உன் நினைவுகள் 

ஏன் என்னோடு 

யுத்தம் செய்கிறது !


பூந்தோட்டமென்று

காதல் விதைகளை  

நான் விதைத்த நிலம் 

ஏன் 

புதை குழி ஆனது !


என் கவிதைகளின் 

ஒவ்வொரு வரியின் 

நிழலாகவும் மாறி 

ஏன் வதைக்கிறாய் ! 


உனக்காக 

காத்திருந்த விழிகளை   

உறக்கத்திற்காக 

ஏன் 

காத்திருக்க வைத்தாய் !


தொலைத்த இடம் தெரிந்தும் 

தொலைத்த பொருள் தெரிந்தும் 

மீட்கத்தான் முடியாமல் 

ஏன் தவிக்க விட்டாய் !


ஏதேனும் ஓர்நொடி 

என் நினைவு 

வருமாகில் 

தொட்டுப்பார் உன் இதயத்தை ...

துடிப்பது என் நினைவல்லவா !


காலங்கள் கடந்தாலும் 

காதல் காயங்களுக்கு 

காலாவதி ஆகாத மருந்து 

உன் அன்பு மட்டுமே ...

மருந்தாக வருவாயோ ...

இல்லை 

பாலூற்றி போவாயோ !!


Tuesday, December 7, 2021

பிறப்பு

எத்தனை பிறப்போ
அத்தனை பிறப்பும் 
இத்தனை உறவும் 
பக்கத்துணை அருள்வாய்!

Monday, December 6, 2021

சொப்பனதிலேனும் சேர்வாயடி !

 


ஆத்தங்கர ஓரத்துல

அந்தி சாயும் நேரத்துல

காத்து கெடக்குறேண்டி 

கண்சிமிட்ட மறந்தேண்டி!


செங்காத்து வீசுதடி 

செவ்வானம் கருக்குதடி 

ஏங்கும் மனசுக்குள்ள 

எரிமலையும் வெடிக்குதடி !


ஐப்பசி அடை மழையும் 

வெளுத்து கட்டுதடி 

கருகிப் போன ஆசைகளும்

வெள்ளத்தில் கரையுதடி


உசிருக்குள் ஒந்நெனப்பு

ஊசியாய் இறங்குதடி 

உசுரோட உசிர் சேர்க்க  

உள்மனசு ஏங்குதடி !


சூரியனும் சாஞ்சதடி 

திரிவிளக்கும் எரியுதடி 

கண்கள் மயங்கையிலே 

கனவிலேனும் சேர்வாயடி !



Tuesday, November 30, 2021

காமு காபி

தேவன் பிறந்தான்
கிமு கிபி என பிரிந்தது
உலக வரலாறு
நீ பிறந்தாய்
காமு (காதலுக்கு முன்)
காபி (காதலுக்கு பின்)
என பிரிந்தது
என் வாழ்க்கை வரலாறு!

Tuesday, November 23, 2021

என்னிலே இருந்த

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காணவல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 

சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 

நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ


கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.


கரை சேர்க்க ஒருவன் 

கட்டாயம் வருவான் !

கண்மூடி பார்த்தால் 

கண்ணுக்குள் தெரிவான் !

Sunday, November 21, 2021

அருள்வாய் சிவனே !

 கண்டத்தில் விடம் கொண்ட சிவனே ...

நெஞ்சத்து விடம் நீக்கி 

அருள்வாய் சிவனே !


மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே!


ஊற்றை சடலமடா 

உப்பிருந்த பாண்டமடா 

மாற்றி பிறக்க 

மருந்தொன்று உரைப்பாயோ 

மாற்றி பிறக்க 

மருந்தொன்று கிட்டுமாயின் 

ஊற்றை சடலம் விட்டே 

உன்னடி சேரேனோ !!


மாமன் மகளோ 

மச்சினியோ நானறியேன் 

காமன் கணையெனக்கு 

கனலாக வேகுதடி 

மாமன் மகளாகி 

மச்சினியும் நீயானால் 

காமன் கணைகளெல்லாம் 

கண் பார்த்தால் வேகாதோ !!


பற்றற்ற நீரினிலே  

பாசி படர்ந்தது போல் 

உற்றுற்று பார்த்தாலும் 

உன் மயக்கம் தீருதில்லை 

உற்றுற்று பார்த்தாலும் 

உன் மயக்கம் தீர்ந்தாலும் 

பற்றற்ற நீராகும் 

பாசியும் வேறாகுமோ !!


சாய சரக்கெடுத்தே 

சாதிலிங்கம் தான் சேர்த்து 

மாயப்பொடி கலந்து 

வாலுழுவை நெய்யூற்றி 

பொட்டென்று இட்டு விட்டாள் 

புருவத்திடை இட்ட மருந்தால் 

இப்பருவம்  ஆனேனோ !!


புல்லரிடத்தே போய் 

பொருள் தனக்கு கையேந்தி 

பல்லை மிக காட்டி 

பரக்க விழிக்கிறேண்டி 

புல்லரிடம் போகாமல் 

பல்லை மிக காட்டாமல் 

பரக்க விழிக்காமல் 

பொருளெனக்கு தாராயோ !!


 உன்மீது 

காமக் கணை எறிந்த 

மன்மதனை எரித்திட்டாய் ...

கயவர்களிடம் குடி கொண்டு 

குழந்தைகளையும் எரிக்கும் 

காமனை ஏன் விட்டு வைக்கிறாய் 

சுயநல சிவனே !

உன் நெற்றிக்கண்ணின் 

அனலும் வெந்ததோ !

ஜடமாய் ஆனாயோ !

யாவரும் உன் 

குழந்தைகளன்றோ !

நெற்றிக்கண் 

திறக்காயோ சிவனே!

Saturday, November 20, 2021

நெஞ்சணைய நீ இருந்தால்

 வான் தொடும் மலைகள்

மலை தழுவும் முகில்கள்

கவிதை மழை பொழியும் 

களிப்பினை மெல்ல தூவும் !


நடை பழகும் நதிமகள்

இடை நெளியும் புதுமகள் 

பறக்கும் பறவை கூட்டம் 

கற்பனைக்கு சிறகு தரும் !


குடை பிடிக்கும் ஒருமரம்

பாய் விரிக்கும் புல்வெளி

நெஞ்சணைய நீ இருந்தால் 

பஞ்சணை தோற்றுப் போகும் !

Tuesday, November 16, 2021

நான் இப்படித்தான் !!

 வர மாட்டாய் என்று 

தெரிந்தும் அழைப்பேன் ...

தர மாட்டாய் என்று 

தெரிந்தும் கேட்பேன் ...

கேட்க மாட்டாய் என்று 

தெரிந்தும் சொல்வேன் ...

நீ எப்படியோ ...

நான் இப்படித்தான் !!


இதுதான் 

கடைசி ஜென்மம் என்று 

நினைத்தேன் ...

உன் கனவுகளோடு வாழவே 

ஜென்மங்கள் 

போதாது போலிருக்கிறதே !


உன் 

கண்ணாடி வளையலும் 

கால் கொலுசும் 

ஓர விழி பார்வையும் 

குறு நகையும் 

காப்பி ரைட் 

கேட்கும் போலிருக்கிறதே 

என் கவிதை 

கிறுக்கல்களுக்கும் !!

Saturday, November 13, 2021

கூடும் மேகங்கள்

 கூடும் மேகங்கள் 

கூட்டுது உன் ஞாபகம் ...


உடல் உருகி 

ஊன் உருகி 

மடிந்தது காதல் ...

எப்போது' அள்ளிப்போவாய் 

எஞ்சியுள்ள எலும்புகளை ...

காதல் வீதியில் 

கடை விரிக்க !!

மழை

குழந்தையின் 
காகித கப்பல்
அழகாகத்தான் இருக்கிறது ...
எனது 
காகித கிறுக்கல்களை விட!

குடைக்குள்
பருவ மழை

காதல் காய்ச்சல் ...
உன்
பார்வை மழையில்
நனைந்த எனக்கு!

நிலா என்னும்
நெற்றி சுட்டி அணிந்து
நட்சத்திர பூக்கள் சூடி
எந்த காதலனுக்காக
தன்னை 
அலங்கரித்து கொள்கிறது
வானம்!?

பிரம்மனின் ஓவியம்
வருணனின் மழையில்
காமனின பாணம்
அக்னியாய் நெஞ்சில்


காத்திருக்கும்போதெல்லாம் 
கண்ணீர்விட வைக்கிறாய் ...
எதிர்பாரா வேளையில் 
இன்ப சாரலில் நனைக்கிறாய் ...
அமைதியாய் இருந்தால் 
விழி மின்னலில் எரிக்கிறாய் ...
பாராமல் போனாலோ 
வார்த்தையில் இடியாய் வெடிக்கிறாய் ..
இனித்தாலும் 
எரித்தாலும் 
நீ வந்தால்தானே 
பூக்குது 
என் காதல் வனம் !!



Thursday, October 28, 2021

மழை

கார்மேகத்திற்கும்
உன் மீது
காதல் போல
உனக்கு ஏன் சிரமமென்று
சாரலாய்
வாசல் தெளித்து 
போயிருக்கிறது
அதிகாலையில் !!

விட்டு விட்டு பெய்யும் மழை போல
நெஞ்சை தொட்டு தொட்டு செல்கிறது
உன் நினைவு

உன் பார்வை மழை விழுந்ததால்
எனக்குள் பெருக்கெடுக்கிறது 
காதல் வெள்ளம்

என்
இதயப்பறவையின் 
வேடந்தாங்கல்
நீ

வான் சிறப்பில்
வள்ளுவன் எழுதாத குறள்...
நீ
மழையில் நனைவது!

நீ குடையை மறந்த செய்தியை 
வானிலை அறிக்கையில் 
சொல்லி விட்டார்களா என்ன ...
உன்னை தொட்டு பார்க்க
வந்து விட்டதே 
மழை !

உன்னை நனைக்கும்
ஒவ்வொரு துளியும் 
பீற்றிக் கொள்கிறது...
தன்னை தீர்த்தமென்று!

Wednesday, October 20, 2021

மாளிகை

இதயமென்னும் ஒரு மாளிகை
உதிக்காதோ காதல் ஒரு நாழிகை

#rejectlove
காதல் தேசத்தில் 
ஏதடி பொது மொழி
என் காதல் மொழி புரிந்தும்
ஏனடி தனி வழி


Thursday, October 7, 2021

வான் மழை

 உந்தன் காதல் மழை 

வஞ்சித்தது போல் 

வான் மழை 

வஞ்சிக்கவில்லை ...

வந்து போகிறது 

எப்போதாவது !


ஜன்னலோரத்தில் 

தலையை சிலுப்பி 

கீச்சு குரலில் சப்தமெழுப்பி 

காலை தூக்கத்தில் 

தினம் 

எழுப்பி விடுகிறது 

ஒரு சிட்டு குருவி ...

நான் அதை விரட்டுவதில்லை ...

என்றாவது ஒரு நாள் 

உன் காதலை கொண்டு வருமோ ..!!!!!


கார்மேகத்தில் மறைந்த நிலா 

எப்போ வரும் என்று 

ஆவலோடு பார்க்கிறது 

குழந்தை ....

நிலா ஏமாற்ற போவதில்லை ....

நீ ...!!!!


ஆண்டுகள் கடந்தாலும் 

மழை 

மழையாகவே இருக்கிறது ..

என் 

காதலை போல !!


மனிதா !

உன் மகனோ மகளோ 

தன் காதலியோடோ காதலனோடோ 

கை கோர்த்து 

காதலில் திளைத்து 

நடப்பதற்காகவேனும்  

புல் தரை வேண்டுமல்லவா ...

அதற்காகவேனும் 

விட்டுவிடு 

பூமியை பசுமையாய் !!




ஓட்டுப்போட வீட்டிற்கு ரெண்டாயிரம் 

கொடுக்கிறர்களாம் ....

செய்தித்தாளில் செய்தி !!

உங்கள் ஓட்டு 

எங்களுக்கே என்ற வாசகத்தோடு 

இரு நூறு ரூபாயோடு 

கவர் ஒன்று கிடந்தது 

தேர்தல் நாள் அதிகாலையில் 

வீட்டு வாசலில் ...!!

நீங்களே சொல்லுங்கள் 

ஜன நாயகம் 

செத்து விட்டதா இல்லையா !!



மலையை வெட்டி

மரத்தை வெட்டி

மண்ணை வெட்டி

ஆத்த மூடி

அணையை மூடி

குளத்தை மூடி

ஏரியை மூடி

மல்லாந்து படுத்து 

யோசித்தான் மனிதன் ...

ஏன் இயற்கை கண் 

திறக்கவில்லை !!


சிலர் ஓடி ஒளிகிறார்கள் 

சிலர் நனைகிறார்கள் 

சிலர் குடை பிடிக்கிறார்கள் 

நான் குடை பிடிக்கவில்லையே 

ஓடி ஒளியவில்லையே 

ஏன் 

நனைக்காமல் போனாய் !

Saturday, October 2, 2021

தோஷம்

 குரு 

====

வியாழனை சுற்றினால் 

தீருமாம் தோஷம் ...

எந்த தோஷம் தீர 

சூரியனை சுற்றுகிறது 

வியாழன் !?


சூரியன் 

======

நவக்ரஹங்களுக்கு 

அதிபதியையே 

சுற்றி வருகிறோமே தினம் ...

இன்னுமா தீரவில்லை 

பூமியில் இருப்பவர் 

தோஷம் !


அவள் விற்ற 

காதலை வாங்க 

செல்லாத நோட்டோடு 

சென்றவன் நான் !


ஒரு வேளை 

வாஸ்து பார்த்து 

உன்னை என் இதயத்தின் 

அறையில் 

குடியமர்த்தவில்லையோ !

Tuesday, September 28, 2021

முக்தி

கண்ணில் காதலூற்றி
காத்திருக்கிறேன் ...

காதல் கொண்டு
காதல் தந்துவிடு

கல்லறை வரை
நெஞ்சறை வேகும் வரை
காதலித்துவிடு

இப்பிறவியிலேயே
நம் காதலை
மோட்சம் பெறவிடு

Thursday, September 23, 2021

பாவம்

செய்த பாவத்தை தொலைக்க
நதிகளில் மூழ்கினோம் ...
நதிகளை தொலைத்த பாவத்தை
தீர்க்க எங்கே மூழ்குவது !!

Wednesday, September 22, 2021

அழகின் அறிவியலா

அழகின் அறிவியலா 
அறிவியலுக்கும் விளங்கா அழகியலா 


கேட்டதை கொடுக்கும் கற்பகத்தருவும் 
உன்னழகை இன்னொருத்திக்கு கொடுக்க திணறும் 

தலைசாய்த்து நீ பேசும் அழகினில் 
தலை சாய்த்து தஞ்சாவூர் பொம்மையும் மாயும் 


Tuesday, September 14, 2021

கவிதைப்பூக்கள்

நீ முகம் துடைத்த 
கந்தல் துணியை 
பொறாமையுடன் பார்க்கின்றன 
பட்டுத்துணிகள்!

நீ முகம் பார்த்த போது 
தன்னை 
அழகாக்கி கொண்டது 
கண்ணாடி!

சிவப்பை 
சிவப்பாக்குவது
எப்படி என்று 
மலைத்து நின்றது 
நீ பூசிய
உதட்டு சாயம்!

தேவதையை 
சுமப்பதால் 
உனது காலணிகளுக்கும்
உண்டு காரணப் பெயர் 
பல்லக்கு!

Sunday, September 12, 2021

காந்தி

துப்பாக்கிகளிலும் 
பீரங்கிகளிலும் 
காந்தியின் கனவுகளை 
நிரப்பி சுடுங்கள்...
வீழட்டும் தீமைகள் 
வாழட்டும் மனிதம் 

Tuesday, September 7, 2021

பிச்சி பூவே !


மனதை பிச்சி போட்ட 

பிச்சி பூவே !

இரவிலும் வந்த பகல் கனவே !

நிழலையும் வாட்டிய காதல் சூரியனே !


கடலளவு தாகமடி  என் நெஞ்சத்திலே  !

தாகம் தீர்க்க  சிறு குவளையோடு வந்தாய் கஞ்சத்திலே !

பொங்கி வரும் காவிரியாய் பாய்ந்து விடு என் பக்கத்திலே !

நம் காதல் கண்டு மன்மதனும் ரதியும் வாட வேண்டும் ஏக்கத்திலே !


என் காதலை 

பகடையாக உருட்டி

என் காதலுக்கு 

நித்திய  அஞ்ஞாத வாசம்

பெற்று தந்த காதல் சகுனி!



என் காதலுக்கு 

நிரந்தர வனவாசம் 

பெற்று தந்த 

காதல் கூனி !








Tuesday, August 31, 2021

தனிமை

கொஞ்சல், சிணுங்கல், ஊடல், கூடல் 
எல்லாம் முடிந்து
தனியே விட்டுப் போனாய் ....

அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை,
தீபம் எல்லாம் முடிந்து, கடவுளை
தனியே விட்டு போகும்
அர்ச்சகர் போல !!

===================================

ஒன்றிய காதலி 
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
ஆதார் ஐ காட்டு என்றாள்!

திராவிட காதலி
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
கறுப்பு ரோசா
வேண்டுமென்றாள்!!

=================================

ஜாலம் காட்டும் பாவை விரல்கள்
புவியின்மீது நடனம்
வர்ண ஜாலம் காட்டும்
அழகு கோலம் ஜனனம்


===============================

க்ரைம் சைபர் ஆக வேண்டும்

என விரும்பியது அந்த காலம்

சைபர் க்ரைம் உருவாகி 

மிரட்டுவது இந்த காலம்

=================================

கிராமிய

கொண்டையில முடிஞ்சு வச்ச தாழம்பூ !
காதல்ல ஏன் அள்ளி வச்ச வேப்பம்பூ !

ஏலக்கா தோட்டத்துல சாணியள்ளி வீசுற !
ஏங்கிப்போன காதலுக்கு கரியள்ளி பூசுற !

கொசுவ அடிச்சாகூட கொலன்னு சொல்லுவியே!
மனச அடிச்சுபுட்டு சொர்ணாக்காவா சிரிக்குறியே !

அடுப்பில்லாம எம்மனச அவிச்சுபுட்ட கடலை போல !
துடுப்பில்லாம எங்காதல் தவிக்குதடி கடல் மேல!

சத்தியமா எம்மனசு ஒருநாள் உனக்கு புரியும் !
நித்திய ஜோதியா என் காதல் என்றும்  எரியும் !

==================================

காதல்ங்கிறது 
விடியல் ஆட்சி மின்சாரம் மாதிரி 
எப்போ வரும்னும் தெரியாது !
எப்போ போகும்னும் தெரியாது !

=================================

ஒரு ரோசாப்பூ கூடவா 
வாங்கி வரவில்லையென்று
கோபிக்கிறாய் ....
பூந்தோட்டத்திற்கு யார்
பூ கொண்டு வருவார் !!?

============≈==================

Saturday, August 28, 2021

காதல் முள் தான் !

 என் வாழ்க்கை கடிகாரத்தை 

ஓட வைப்பது 

நொடி முள்ளோ 

நிமிட முள்ளோ 

மணி முள்ளோ அல்ல 

உனது 

காதல் முள் தான் !


கண்ணாடி போன்றவன் இறைவன்

நீ விருப்பு காட்டினால் அவனும்

வெறுப்பு காட்டினால் அதையும்



பாசத்தால் கட்டப்பட்ட ஆன்மா என்னும் பசு, கட்டிலிருந்து விடுபட்டு தன் தலைவனான பதியை அடைய முயலும் முயற்சியே வாழ்க்கை


24 மணிநேரமும்

வகுப்பறையிலேயே இருந்தும்

எதையும் கற்கவில்ல...

பெஞ்சும் ... டெஸ்கும் !!



உனது இதய தொகுதியில் 

போட்டியிடும் எனக்கு 

காதல் சின்னத்தில் வா(ழ்)க்கை 

அளித்து தேர்ந்தெடுக்க 

வேண்டுகிறேன் 



காதல்

மீசையை முறுக்கி பாரதி 

Wednesday, August 25, 2021

தாமரை

சேற்றில் உதித்தாலும் 
செந்தாமரையாவதே கர்மம் 

கர்மத்தில் தர்மத்தை கொண்டால் 
மோடாசம் என்பதே மர்மம்


Sunday, August 22, 2021

தனிமை

இளமையில் உன்னோடு 
தனிமையில் கொஞ்சிய 
இனிமை நினைவுகளெல்லாம் 
தனிமையில் தவிக்கையில் 
வெறுமையில் வாட்டுதடி 

மஞ்சத்தில் துஞ்சிடினும் 
நெஞ்சத்தில் விழித்திருக்கும் 
வஞ்சி உன் நினைவோடு 
நீறாய் போவேனோ... இல்லை 
உன் நினைவோடு மீண்டும் 
பிறப்பேனோ!!

Friday, August 20, 2021

திண்ணையையும் காணவில்ல.!

 அசைபோட பல்லில்ல,

ஆனாலும் அசைக்காத நாளில்ல.! வெத்தல வாசமும் வெள்ளந்தி நேசமும் பொதைஞ்சுதான் கெடக்குது பொக்கை வாயிக்குள்ள.! சொல்கேட்க ஆளில்ல, ஆனாலும் சொல்லாத நாளில்ல! அரைச்ச பொடிக் கணக்கா நரைச்ச முடிக் கணக்கா அம்புட்டு கெடக்குது அனுபவம் அதுக்குள்ள.! உடுக்கை போல கை நடுங்கும் கொட்டப் பாக்கு எடுக்கயில; உரலுங்கூட இசை முழுங்கும் உலக்கை புடிச்சு இடிக்கயில.! சிறுவாடா சில்லறைய முடிஞ்சுக்குவா சீலையில; முட்டாயி வாங்கிக்கன்னு கொடுத்துடுவா கேட்கயில.! சிசிடீவி சின்ன டீவி இவ இருந்தா தேவையில்ல; இவ சொல்லும் கதை முன்னே அவதாரும் மிகையில்ல.! ஆடாத தலையக்கூட ஆட்டியாட்டி பேசுறதும், காதோரம் வளையத்த காட்டிக் காட்டி பேசுறதும் அழகுன்னு சொன்னாங்க அசலூருக்காரங்க.! அடியே.. தொண்ணூறத் தொட்டவளே, தொங்குஞ் செவி கொண்டவளே.. தானாவே தலையாடும் நீ பேசத் தண்டட்டி தூளியாடும்.! நினைச்சுப்பாத்தா பேரழகி நீதானடி திண்ணைக் கிழவி.! உன்னயத்தான் பல நாளா தேடுகிறேன் காணவில்ல, உன்னையிழந்த துக்கமோ என்னவோ இன்னைக்குப் பல வீட்டில் திண்ணையையும் காணவில்ல.!

Friday, August 13, 2021

கல்லறையில்

 உன் நினைவுகளை 

குப்பையில் போட்டேன் ...

அவை 

மக்காத குப்பைகளாகி 

என் இதய நிலத்தை 

நீர் வற்றி 

போக செய்து விட்டன !!


என் நம்பிக்கைகள் 

இன்னமும் 

உயிரோடுதான் இருக்கின்றன ...

கல்லறையில் !!


எதற்கோ 

நீ எழுதிய முன்னுரை 

என் காதலுக்கு 

முடிவுரை ஆகி விட்டது !!

Thursday, August 12, 2021

கண்ணீர்

கால காலமாய் 
காதலை இழந்தவர்கள் 
கடற்கரையில் விட்ட 
கண்ணீரால் 
உப்பானதோ கடல் நீர் 

Wednesday, August 11, 2021

ஆரிக்கிளில்

 ஆரிக்கிளில் வந்து சேரும் உன் நினைவு 

அப்படியே வெளியேறுது வென்ட்ரிக்கிளில் 


உன் மூச்சு காற்றை மட்டும் 

கடத்துவேனென்று 

அடிக்கடி அடம் புடிக்குது ட்ரேக்கியா 


எந்த பிம்பம் கண்டாலென்ன  

ஆப்டிக் நெர்வ் காண்பது 

என்றென்றும் உன் சிக்னலே 


கேட்டவர்கள் சொன்னார் நீ இதயத்திலென்று 

எனக்கன்றோ தெரியும் உன் வாசம் 

மோட்டார் கார்ட்டெக்ஸிலென்று 


===========================


தேர பூச்சி போல மனசுல ஒட்டிகிட்ட 

ஏர புடிச்சு மச்சான் மனச உழுது புட்ட

கிச்சடி செம்பா நெல்ல போல வெளஞ்சு புட்ட  

மச்சான் வாலிபத்த தினம் உசுப்பி விட்ட   !


சத்தம் போடுதடி தென்மேற்கு சாரல் மழ 

சித்தம் ஏங்குதடி சேலையில் நீ கொட புடிக்க 

ரத்தம் ஓடிடும்  நரம்புகளெல்லாம் 

நித்தம் தேடுதடி காதல் பாடம் படிக்க  !


வேலியோரம் இருவாட்சி பூத்து நிக்குதடி 

ஓங்காதோரம் கத சொல்ல காத்து நிக்குதடி 

தோளோரம் சாஞ்சுக்க நீயிருந்தா 

நெஞ்சோரம் மோகமும் பாத்தி கட்டுமடி !

Sunday, August 8, 2021

விவசாயி

Saturday, August 7, 2021

காதல் விவசாயி

 


ஆசை விதையை 

விதைத்து விட்டேன் ...

அன்பு மழையை 

எப்போது பொழிவாய் !!

---- காதல் விவசாயி 


பலருக்கு 

இதயம் 

உடலின் ஒரு 

பாகம் ...

எனக்கு அது 

பாக்கியம்  ...

நீ இருப்பதால் !!



பூமி 

தன்னை அலங்கரித்து கொள்கிறது ..

நீ போடும் 

கோலத்தால் !!


உன்மீது கொண்ட 

மோகங்கள் தீர 

யாகங்கள் செய்ய வேண்டுமா !

இல்லை 

யுகங்கள் தோறும் 

பிறக்க வேண்டுமா !!


நான் தொலைத்த 

கவிதை நீ ....

நீ தொலைத்த 

காதல் நான் !!



மனப்பூர்வமான எச்சரிக்கை ...

காதலிப்பது 

இதய நலத்திற்கு தீங்கானது !!


உன்னை பார்ப்பதில் 

என் கண்களை விட 

ஆர்வம் அதிகம் 

கண்ணீர் துளிகளுக்கு ...

உன்னை பார்க்கும் போதெல்லாம் 

வந்து விடுகிறது !!


இன்னமும் தெரியவில்லை 

எந்த ரயில் 

உன்னை என்னிடம் சேர்க்கும் ...

இல்லை ...

எந்த ரயில் 

என்னை உன்னிடம் சேர்க்கும் !!


பூக்கும் பூக்களெல்லாம் 

இறைவனடி சேர்வதில்லை ...

சில பூக்கள் 

புண்ணியமும் செய்திருக்கின்றன 

உன் கூந்தல் சேர்வதால் !!


பேசவே தெரியாதே 

என் பேனாவுக்கு ...

கவிதை பாட 

எப்படி கற்று'கொடுத்தாய் !!


நிழல் அழகு ... வெயில் இருப்பதால் !

குளிர் அழகு ... வெப்பம் இருப்பதால் !

உணவு அழகு ... பசி இருப்பதால் !

இறைவா நீ அழகு ....

சாத்தான் இருப்பதால் !!








தர்ப்பண சோறு!!

பித்ருக்களுக்கும் கட்டுப்பாடு 

வற்றல்  வடாம் 

எடுக்க அனுமதி இல்லை ..

ஆடி அமாவாசையன்று மட்டும் 

தர்ப்பண சோறு!!


கல்லை எடுத்து போட்டு 

தண்ணீர் குடித்து 

புத்திசாலி என காட்ட 

நான் தயார்தான் 

தண்ணீர் எங்கே முட்டாள்களே !!


கல்லை போட்டால் 

தண்ணீர் வராதா ...

கரன்சிக்கு எங்கே 

போவேன் !!


செடி முழுக்க முட்கள் 

ஓரத்தில் ஒரே ஒரு பூ 

மைனாரிட்டிக்குத்தான் மரியாதை 

பெயர் ரோஜா செடியாம் !!!


Thursday, August 5, 2021

துண்டு சீட்டு

 ஏண்டா ...

துண்டு சீட்டுல 

எதையாவது கிறுக்கி படிச்சா 

கவிஞர் ஆக்குவோம்னு நெனச்சியா ....


துண்டு சீட்டு படிக்கிறவங்கள  

முதல்வர் ஆக்கினாலும் ஆக்குவோம் 

கவிஞர் ஆக்கமாட்டோம் ...

ஓடிப்போய்டு !!!


 ===================================

தாஜ்மகால் காதல் பரிசாக கேட்டாள் 

கல்லறையை எப்படி 

காதல் பரிசாக தருவேன்??


==================================


காதலுக்கு 

சாதியில்லை 

மதமில்லை.....

காதலித்து 

பிறக்கும் 

குழந்தைக்கு 

உண்டு 

=================================

நம்புங்கள்...

வயது ஏற ஏற 

எனக்கு அறிவு முதிர்ச்சி 

வந்திருக்கிறது....

குழந்தை பருவத்தில் 

பலூனுக்கே குதூகலித்த மனது 

இப்போதெல்லாம் 

ரூபாய் நோட்டுக்குதான் 

குதூகலிக்கிறது

===================================

பாற்கடலை 

பருக நினைத்த பூனை போல 


==================================

Wednesday, August 4, 2021

பிரிவு

நாம் 
இந்த தண்டவாளங்களை போல 
என்றாய்  ..

தண்டவாளங்கள்
அருகருகே சென்றாலும்
சேர்வதே இல்லையே!!

==================================

உனக்கென்ன 
பாம்பணையே பஞ்சணையாக்கி
துஞ்சி விட்டாய் ...

பஞ்சணையிலும்
அவள் நினைவுகள்

≈=================≈========÷÷÷==


Saturday, July 31, 2021

ஆல்பபெட்

Aனது மனதில் 
Bரமிப்பை ஏற்படுத்தும்
Cல கனவுகள் 
Dனம் இதயத்தில் 
Eனிப்பு மிட்டாயாய் 
Fபோதும் இனிக்கும்  
Gவனில் கரையும் 
Hச்செயல் செய்தாலும் 
Iயமின்றி கலக்கும் 
Jயிக்குமோ 
Kள்வியாகுமோ
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z

தடுக்கணும்

 ஏண்டா, நீட்ட தடுக்கணும், மீதேன தடுக்கணும், ஹைட்ரொ கார்பன தடுக்கணும், மேகதாதுவ தடுக்கணும், ஜிஎஸ்டிய தடுக்கணும், நியூட்ரினோவை தடுக்கணும், துறைமுகத்த தடுக்கணும், நவோதயாவ தடுக்கணும், ஹிந்திய தடுக்கணும், சமஸ்க்ரிதத்தை தடுக்கணும், விவசாய சட்டத்த தடுக்கணும், சாகர் மாலாவை தடுக்கணும், சிஐஏ வ தடுக்கணும்,உரிமைகள் பறி போறத தடுக்கணும், வந்தது வராத்தது எல்லாத்தயும் தடுக்கணும்... உனக்கு எவளோ ஒருத்தியோட பார்வைய தடுக்கிறதுதான் முக்கியமா போச்சா ... எய்ம்ஸ் செங்கல்ல எடுத்து அவ கண்ண குத்திட்டு போயெண்டா !

Friday, July 30, 2021

காகிதம்

தமிழ் தள்ளி நின்று 
என்னை முறைத்தது

விரல்கள் முள்ளாகி 
இதயத்தை குத்தியது

காகிதம் தன்னையே
கசக்கி கொண்டது

என்ன நடந்தது ....

ஓ  ... இன்று ...
உனக்கான கவிதையை
இன்னும் எழுதவில்லையோ!!

================================

என் 
கனவின் முகவரியை கண்டுபிடித்து 
கனவில் நுழைந்து அத்துமீறும் நீ
என்
வீட்டின் முகவரியை 
எப்போது கண்டு பிடிப்பாய்!!

==================================

நீ
என் இதயத்தில் 
மையம் கொண்ட 
வலுவிழக்காத 
கரை கடக்காத
புயல்!

==================================

பூந்தோட்டத்தில் 
ஒரு
நந்தவனம்!!

==================================
 
என் கனவு வீட்டை
எந்த பூட்டு போட்டு பூட்டினாலும் 
அவள் வந்து விடுகிறாள் 
மாஸ்டர் கீயோடு!!
 
==================================

பூக்களின் உலகில் 
நான் ராணி என்றது ரோஜா ...
உன் பெயர் எழுதிய 
காகிதத்தை காட்டினேன் ...
பாவம் ....
செடியே வாடி விட்டது!!

==================================


Thursday, July 29, 2021

மழை

மழை
இடி சத்தத்தில் மிரண்டு
அழ ஆரம்பித்து விட்டனவோ
மேக குழந்தைகள்!


அருவி
நதிமகளை காதலித்து
ஏமாற்றியது யாரோ ...
மலை உச்சியிலிருந்து
குதிக்கிறதே !!


பிறந்த உடன் 
தற்கொலை எண்ணமா ...
மேகத்திலிருந்து
குதித்தது மழைத்துளி!!

நட்சத்திரங்கள்
இவ்வளவு ஏழையா பூமி ..!!
வானக்கூரையில்
இரவு நேரத்தில் 
எவ்வளவு ஓட்டைகள்!

நிலா
விண்மீன் புள்ளிகளை
வைத்துவிட்டு
கோலமிட தெரியாமல்
தவிக்கும் புதுப்பெண்!

எனக்கும் ஆசைதான்
துண்டு சீட்டில் 
தத்துவங்களை கிறுக்க ...
என்ன செய்வது ...
என்னை பிறக்க வைத்ததே
என் தாயும் தந்தையும்
கொண்ட காதல் அல்லவா!!


சொல் நயமும் பொருள் நயமும் 
தேடி எழுத நான் கம்பனல்ல
உவமை நயம் காட்டி உருக வைக்க 
நான் காளிதாசனல்ல

காதல் இலக்கணத்தில் 
கவிதையை கற்று விட்டேன் 
நீ பிரிந்த கணத்தில்
வாழ்வினையே விற்று விட்டேன்!

உன் பார்வை டோஸ்கள்
காதல் நோயை கூட்டுதடி
இதயம் முழுதும்
காதல் வைரசை கொட்டுதடி !

மழை விழுந்தால் 
மண்ணெங்கும் மண் வாசம் - உன் பார்வை விழுந்தால்
மனமெங்கும் பூ வாசம்

என் மன வாய்க்காலில்
வென்னீர் பாய்ச்சும் மங்கையடி ...
என் கவிதை வாய்காலில்
தண்ணீர் பாய்ச்சும் கங்கையடி

என் உயிர் துடிப்பை
உன் விழித்துடிப்பில் காட்டுகிறாய்
உன் இதழ் துடிப்பில் 
என் இதயத்தை வாட்டுகிறாய்

மோகமென்னும் திராவகத்தை
ஊற்றுகிறாய் ...
தேகமெங்கும் தீமுகத்தை
ஏற்றுகிறாய்!

காமதேவன் வேடம் பூண்டு 
காதல் வலை விரித்தான் 
கால தேவன் எனை கொள்ள
பாச வலை விரித்தான்

காதலென்னும் மென்பொருள்
இயங்க மறுக்குதடி
அப்டேட் ஒன்று நீ தந்தால்
வாழ்வே பூட் ஆகுமடி



Tuesday, July 27, 2021

உன் கொலுசு !

 பெயரில்லா ராகத்தை 

என் உயிரில் இசைக்கிறது 

உன் கொலுசொலி !


என் காதல் தேசத்திற்கு 

தேசிய கீதம் கிடைத்தது 

நீ கொலுசணிந்து 

வந்தபோது !


பிரபஞ்சமே ஆட 

ஆடும் உன்னை 

ஆட்ட ராஜன் 

என்றல்லவா 

சொல்லியிருக்க வேண்டும் ...

ஏன் 

"நட" ராஜன் என்கிறார்கள் !!


இலவசமாக 

இசை கச்சேரி 

நடத்துகிறது 

உன் கொலுசு !

வைரப் பூங்கொடிக்கு

 பூலோக தோட்டத்தில் பூத்த  

வைரப் பூங்கொடிக்கு 

கார்மேக தோட்டத்தில் பூத்த 

கண்ணாடி பூக்களால்  

அபிஷேகம் !



மண்ணில் விதைத்த 

வித்துக்களுக்கு 

விண்ணின் பரிசாக 

கண்ணாடி முத்துக்கள் !


தெற்கிலிருந்து தென்றல் 

கிழக்கிலிருந்து கொண்டல் 

மேற்கிலிருந்து மேலை 

வடக்கிலிருந்து வாடை 

எத்திசையிலிருந்து 

எந்த பெயரில் வந்தாலென்ன 

அவள் மேனி தழுவி வரும்போது 

மட்டும் நீ பூங்காற்று !


தண்ணீர் வரி கேட்காமல் 

வாரி இறைக்கிறாய் வான் மழையே ...

எனில் 

கண்ணீர் வரும் அளவிற்கா 

வாரி இறைப்பது !!


நிலவு தேவதைக்கு 

இவ்வளவு அர்ச்சனையா  ...

நட்சத்திர பூக்களால் !! 


ஆவணி தென்றலும் 

கடந்து செல்ல  

தயங்குகிறது 

தாவணி தென்றலை  !


பட்டு புடவை 

கட்டிக்கொண்டு 

அழகா இருக்கிறேனா 

என்கிறாய் ...

எப்படி பொய் சொல்வது 

உன்னை விட 

பட்டுப்புடவை அழகென்று !



Sunday, July 25, 2021

கல்வெட்டு நினைவுகள்

 முன்பொரு நாள் 

நீ உருவாக்கிய 

அழகிய தருணங்கள் 

இன்று உன்னால்  

அழும் தருணங்கள் 


உன் கண்வெட்டு 

செதுக்கிய 

கல்வெட்டு நினைவுகள் 


படித்து கிழித்து விட்டாய் 

என் இதயத்தை 


என் வாழ்வெனும் கதைக்கு 

திரைக்கதை எழுதிய இறைவன் 

வெறும் பரபரப்பிற்காக 

சேர்த்த கதாபாத்திரமோ 

நீ 


நீ

வரமா இருக்கணும்னுதான்

நெனச்சேன் ...

வராம இருக்கணும்னு

நெனக்கலியே .... !!


மனதில் ஆலகாலத்தோடு

பூமியில் அலையுது 

சில ஜீவனே !

ஆலகாலத்தை 

கழுத்தில் வைத்திருக்கிறாயா

இல்லை இந்த ஜீவன்களின்

மனதில் இறக்கி விட்டாயா

சிவனே!


லவ்பிஎல் 

காதல் கோப்பையாய் 

கிடைப்பாய் என்றிருந்தேன் 

சியர் கேர்ளாய் 

ஆடிவிட்டு போய் விட்டாய்!!


என் காதல் கதையை

எழுதும்போது மர்ம கதை

எழுத்தாளனாகி விட்டான்

இறைவன் ..

கிளைமாக்ஸில்

கதாநாயகியை 

வில்லியாக்கி விட்டானே!



ஆடி

 ஆடி தள்ளுபடியில் 

"எதையாவது" தரக்கூடாதா 

என்று கேட்டேன் ...

அவள் காதலையே 

தள்ளுபடி செய்து போனாள் !


காதலர்களாகவே இருப்பதாலோ 

ஆடியில் மட்டுமின்றி 

வாழ்நாள் முழுதும் பிரிவு !

Thursday, July 22, 2021

விழி

வழியில் விழி பதித்து நடப்பதா...
இல்லை ... உன்
விழியில் வழி தேடி கிடப்பதா !


நீ பிறந்த பிறகு 
அழகு என்ற சொல்லுக்கு
புதிய அர்த்தம் சேர்த்து
தன்னை
புதுப்பித்து கொண்டிருக்கிறது
அகராதி


நான்
இரண்டு வரி கவிதையை
எழுதி முடிப்பதற்குள்
ஒரு
கவியரங்கத்தையே
நடத்தி விடுகிறதே
உன் கண்கள்!

மணலில் 
கவிதை எழுத முடியுமா ..
உன் காலடி தடங்கள்!


Wednesday, July 21, 2021

துணி

உந்தன் கால் கொலுசொலிக்கு
100.0 ரிக்டரில்
அதிர்ந்த என் மனது 
உனது நினைவுகளில் 
புதையுண்டு கிடக்கிறது ...
காதல் பேரிடராக அறிவித்து
உன்னையே நிவாரணமாக
தருவாயா!!!


நீட்டை கூட தடுதது விடலாம் 
வேட்டையாடும் உந்தன்
நினைவுகளை எந்த
சட்டம் கொண்டு தடுப்பது!

அரிச் புடைக்க தெரியாத நீ
இதயங்களை புடைக்க
எப்படி கற்றுக்கொண்டாய்!!


இதயங்களை 
சிதறடிக்கும் உன்னை
காதல் தடுப்பு சட்டத்தில்
கைது செய்யுமா
அரசாங்கம் !!

உடல்களை சிதறடிப்பது
மனித வெடிகுண்டு என்றால் 
இதயங்களை சிதறடிக்கும்
உன்னை
என்னவென்று அழைப்பது!!

துணி துவைக்கும் சாக்கில்
நீ ஆற்றங்கரைக்கு வருவது 
என்னை துவைக்கத்தானே!!


ஆயுதம்


கெஞ்சும் இதழ்களில் 
செந்தமிழ் கொஞ்சிடும்
விஞ்சும் கணங்களில் 
சிந்தை அறுந்திடும்

ஏந்திழை மேனியில்
மோகினி நாட்டியம்
எந்தன் மேனியில்
மோகத்தின் தாண்டவம்

மயக்கும் விழிகளில்
மன்மதன் ஆயுதம்
தாக்கும் கணங்களில்
என் மனம் சிதறிடும்

====================================

குச்சி ஐஸ் ஒண்ணு வாங்கி 
ரெண்டு பேரும் சுவச்ச கத
நாவல் பழம் தின்னுபுட்டு 
நிறம் பாத்து ரசிச்ச கத
உனக்கு நானும் எனக்கு நீயும்
பிரசாதம் வாங்கி ருசிச்ச கத
உனக்கு நானும் எனக்கு நீயும்
நட்சத்திர பலன் பாத்து ரசிச்ச  கத

நெனவிருக்கா  ... நெனப்பிருக்கா ...

மொத்த கதயும் மறந்து என்னை
பித்தனாக்கி போன கத !!


Sunday, July 18, 2021

மத்தாப்பு

பொற்காசுகளுக்காக 
கவிதை எழுதும்
சில்லரை கவிஞனல்ல நான் ...
பொற்சிலைக்காகவே 
கவிதை எழுதும் 
சித்திரக் கவிஞன் !

====================================

நீ நெருப்புதான்...
என் 
கவிதை மத்தாப்புகளுக்கு !

≈===================================

சிறு வயதில் கற்ற 
பம்பர விளையாட்டை
பருவ வயதில்
என்னிடமே விளையாடுகிறாய் ...
விழிச்சரடை வீசி
சுற்ற வைக்கிறாய்
என் இதயத்தை 
பம்பரமாய் !

====================================

எனது காதல் பஞ்சாங்கத்தில் ... 
உன்னை காணா நாட்கள் 
அமாவாசை!
உன்னோடு பேசா நாட்கள் 
சிவராத்திரி!
நீ இருக்கும் திசை தவிர்த்து
எல்லா திசையும் சூலமே !

====================================

துணிகளை வெளுத்து
என் இதயத்தை 
கறையாக்கி விட்டாயே!

=================================/==

ஆலய வாசலில்
தலைமுடியை 
நேர்ச்சை தருவதாக வேண்டி
தரையில் விழுந்து வணங்கிய
என் காதில் கிசுகிசுத்தது பூமி ...
"நீயே எனக்கு நேர்ந்து விடப்பட்டவன்"

====================================

பட்டி மன்றம் நடத்தி 
பார்த்து விடலாமா ...
என் கவிதை விளைய
சிறந்த காதல் பரப்பு ...
உன் விழியும் 
விழி சார்ந்த இடமுமா?
அல்லது 
உன் உதடும்
உதடு சார்ந்த இடமுமா?

====================================

தீண்டாமையை நான் வெறுக்கிறேன் ...
உன் விழிகளை
தீண்டா மையை !

====================================

நீ காத்திருக்கும்
பேருந்து நிறுத்தத்தின்
நிழற்குடை கூட
கடவுளிடம் விண்ணப்பம் போடுகிறது 
பேருந்து இப்போதைக்கு 
வரக்கூடாதென்று ..  
நான் என்ன சொல்லி 
வேண்டுவது !!?

====================================

தேனிலவிற்கு
எங்கே போகலாம் 
என்று கேட்கிறாயே ...
நான்
உன்னையல்லவா
தேன்நிலவு என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன் !!

====================================

உன்னிடம்
மையம் கொண்டிருக்கும்
காதல் அழுத்த
வாழ்வு மண்டலம்
எப்போது வலுப்பெறுமோ ...
எப்போது என்னில் 
காதல் மழை பொழியுமோ ...
இல்லை ...
என்னை கபந்து 
சென்று விடுமோ !

====================================

எந்த டிகிரியில்
உன் பார்வை விழுந்தாலும் 
நூறு டிகிரிக்கு 
எகிறி விடுகிறது
காதல் வெப்பம் !

====================================

Saturday, July 17, 2021

காய்ந்த சருகிற்கு

 


சீதை காத்திருந்த அசோகவனமெங்கே  

தமயந்தி காத்திருந்த சோலையெங்கே 

கண்ணகி காத்திருந்த மாளிகையெங்கே 

மாதவி காத்திருந்த குடிலெங்கே 

சந்திரமதியின் துயரமெங்கே 


காய்ந்த சருகிற்கு 

கைவருமோ நாட்டியம் ...

கற்று கொடுக்க முயல்கிறதே 

களத்துமேட்டு காற்று ! 



ஓசையின்றி இருந்தாலும் 

ஆசையின்றி இருந்திடாதோ 


தூரத்து குயிலின் கூவலொன்று  

உரசி பார்க்குது  ஏக்கங்களை  


விருப்பத்தோடு போட்ட விதை 

நெருப்பாக முளைக்குதிங்கு  

எங்கோ ஒலிக்கும் பாடலொன்று 

தூங்கும் உணர்வுகளை எழுப்புதிங்கு  


Friday, July 16, 2021

தண்ணி

ஓடுகின்ற தண்ணியிலே
ஆடுகின்ற அலையெல்லாம்
வாடுகின்ற என் மனதின் 
தேடுதலை சொல்லிடாதோ!

விண்ணிலாடும் கார்முகிலும் 
மண்ணிலாடும் பூங்கொடியும்  
கண்ணிலாடும் கனவுகளின் 
வண்ணங்களை சொல்லிடாதோ !

ஏற்றமில்லை என்னில் 
தோற்றமில்லை கண்ணில் 
மறந்துபோன கவிதைகளை 
காற்று வந்து சொல்லிடாதோ !




கண்ணம்மா

களத்து மேட்டில் காத்திருக்கேன் கண்ணம்மா !
களச்சுப் போயிக் காத்திருக்கேன் கண்ணம்மா !
உழச்ச வேர்வ ஊத்துப்போல கண்ணம்மா !
ஊத்துதடி தொடச்சு விடு கண்ணம்மா !

பசிச்சுப் போயிக் காத்திருக்கேன் கண்ணம்மா !
பழஞ்சோறு எனக்குப் போதும் கண்ணம்மா !
உரிச்சு வச்ச வெங்காயம் கண்ணம்மா !
உடன் கடிக்கப் போதுமடி கண்ணம்மா !

விரல் கூட்டிக் கவளச்சோறு கண்ணம்மா !
விரும்பி எனக்கு ஊட்டிடடி கண்ணம்மா !
எழந்த தெம்பு எல்லாமும் கண்ணம்மா !
ஏத்தத் தண்ணி போலேறும் கண்ணம்மா !

முந்தானக் கொட பிடிச்சு கண்ணம்மா !
முழுவெயில மறச்சு நில்லு கண்ணம்மா !
கொஞ்ச நேரம் கண்ணசரக் கண்ணம்மா !
ஒம்மடியக் கடன் கொடுடி கண்ணம்மா !

களத்து மேட்டுக் காவலிலே கண்ணம்மா !
கனிஞ்ச காதல் உடன்வருமே கண்ணம்மா !
முடிச்சிடவே பல கடமை கண்ணம்மா !
முழுவாழ்வும் தொண இருடி கண்ணம்மா !

கூட்டு வண்டி

கூட்டு வண்டி கடகடக்குது 
குளிர்காத்து சுழன்றடிக்குது
மாட்டு மணி சத்தமும்தான் 
எம்மனச கிறங்கடிக்குது 
எளநீர் மனசழகி 
எளஞ்சிரிப்பு முகத்தழகி 
தோள் சாஞ்சு கத சொல்லும் 
பதநீர் பேச்சழகி 
கட்டு புல்ல இழுக்கும் காள 
எட்டி நட போடுதடி
கொட்டும்மழ பெய்யுமுன்ன 
கூடு போய் சேர்வோமடி 
ஒட்டி நீயும் தொணயிருந்தா 
போறவழி சொர்க்கமடி 
வெட்டி விட்டு நீ போனா
காதல் வழியும் நரகமடி

Sunday, July 4, 2021

ஊசி

காதற்ற ஊசியும் கூட வராது
காதோடு பேசிய காதல் மொழிகள்
கூட வருமோ !!

========================

ஆலமரமாய் என் காதல்
அதில் ஆணிவேர் நீயடி!

=========================

மேகம் விடும்  மழைத்துளிகள்
விண்ணில் நடத்துது பந்தயமே...
தேகம் தொடும் முதல் துளிக்கு 
மண்ணில் கிட்டுது  சாந்தியுமே!

===============================

ஒத்தயடி பாதையில 
ஒத்த கொட புடிச்சுகிட்டு 
ஒரசிகிட்டு நடக்கயில 

ஒன்ன தாண்டி வரும் காத்தும் 
போதையில் தள்ளாடுதடி 

============================

கருத்தரித்து பிறப்பவன் பிள்ளையன்று
பெற்றோர்
கருத்தறிந்து நடப்பவன் பிள்ளை

==================================

நீர் பொங்கும் கடலே 
கைகோர்த்து நடந்த தடங்களை 
அலை வீசி அழித்து விட்டாய் 
மனதோடு பதிந்த தடங்களை 
எதை வீசி அழித்திடுவாய்!!

===================================

சேத்து வயலில் நீ நடந்தா 
முப்போகம் வெளயுமடி 
நேத்து நட்ட சிறு நாத்தும் 
தலைதூக்கி ரசிக்குமடி 

கயல்விழி பார்வையாலே 
கருவாடா போனேனடி
வயல்வெளி தென்றல்கூட 
சுடுங்காத்தா போச்சுதடி 
 
வரப்போரம் போகும்பெண்ணே 
மனசோரம் வருவாயடி 
வரப்போகும் ஆவணியில் 
கழுத்தோரம் தங்கத்தாலியடி

====================================



Sunday, June 6, 2021

ஏரெடுத்து நிலத்தினில் அவள் எழுதும் கவிதை

காடு வெட்டி கல் பொறுக்கி 

கம்பு சோளம் தினை வெதச்சு 

மேடு வெட்டி முள் பொறுக்கி 

முத்து சோளம் தினை வெதச்சு 


நீர் ஆடையின்றி அம்மணமாய் ஓடும் நதி 

நீராட வழியின்றி தவித்து ஓடும் விதி 


வளர்ந்து விட்ட பருவப்பெண்போல வெக்கமா ...

தலையை வளச்சு பாக்கிறியே தரையின் பக்கமா 


மண்மகளை தொழுது மாடு பூட்டி 

பொன்மகள் வலம் வந்தாள் ஏர் ஓட்டி  

காளையதன் கழுத்தில் கிண்கிணி ஒலிக்கும் 

கன்னியவள் காதில் மணி சிணுங்கும் 

ஏடெடுத்து உன் நினைவில் நான் எழுதும் கவிதை 

ஏரெடுத்து நிலத்தினில் அவள் எழுதும் கவிதை 

உன் கால் பட்ட நிலத்தினில் விளைந்திடும் பொன்னே 

கனவுகள் நனவாகும் காலம் இருக்குது பின்னே 

Monday, May 31, 2021

தீ

அணைத்தால் 
தீ அணைந்திடும் என்றார்கள்...
நீ அணைத்தபோதுதான்
என்னுள் எரியவே
தொடங்கியது!

மயிலும் பாக்க காகமாச்சு
குயிலின் குரல் நாராசமாச்சு
ரோசாவும் அரளியாச்சு
தாமரையும் சருகாச்சு
அன்னமும் நொண்டியாச்சு
தேரும் கட்ட வண்டியாச்சு
பொன்னும் தகரமாச்சு
நிலவும் கொள்ளியாச்சு
தேனும் கசப்பாச்சு
மானும் கழுதையாச்சு
அத்தனையும் நீ பிறந்த பிறகாம்
மொத்த ஊரும் இதே பேச்சு

கண்ணால் கதை சொன்ன ரதியே
மெய்யென மயங்கியதென் மதியே
கதியென கொண்டேன் ரதியே
விதியென போனது சதியே

பொன்வண்டின் ஆடையணிந்து
தீண்டியது தேளொன்று
வானவில் வண்ணம் பூசி
தாக்கியது மின்னலொன்று
காகித பூக்களால் மாலையிட்டு
நகைத்தது தேவதையொன்று

வயல்வெளி இழந்தது
தொழுஉர சுவாசம்
உடலுக்குள் ஆயிரம்
நோய்களின் வாசம்

இல்லத்தில் எல்லாமே
இயந்திரமென ஆச்சு
இதயத்தில் ஆடாமல்
மயங்குது உயிர் மூச்சு

கையெட்டும் தூரத்தில் 
வசதிகள் அட்டாச்டு
சுடுகாடும் வந்திடுமோ
வீட்டுக்குள் அட்டாச்டு




Friday, May 28, 2021

காலதேவன்

 சமூக விலங்கென பிறந்தாய் 

சமூக விலகல் வழக்கமென்கிறாய் 


மண்வளம் கொண்டு உடல் வளம் வளர்த்தாய் 

தன்னலம் கொண்டு பூநிலம் சிதைத்தாய் !


சிந்தையின் வளத்தால் சிகரம் படைத்தாய்  

அறிவியல் போதையால் புவியியல் கெடுத்தாய் !


அமுதம் தந்த பூமிக்கு விஷத்தை ஊட்டினாய் 

அமுதம் உண்ண மட்டும் வாயை திறக்கிறாய் !


முனிவனின்  ஆன்மிகம் சடங்கென பாவித்தாய்  

உயிரின் மோகத்தால் தனிமையில் முனிவனானாய்  


இயற்கையின் சுவாசத்தை செயற்கையால் மூடினாய் 

உன் சுவாசம் காக்க கவசங்களை தேடுகிறாய் !


பயணசீட்டு வாங்கியவனுக்கு வாகனம் சொந்தமல்ல 

பயணசீட்டோடு வந்தவன் நீ உலகம் உனக்கல்ல !


கணனியிலும் போட முடியாது காலதேவன் கணக்கை 

புரிந்து கொண்டால் உன்னை வாழ வைக்கும் இயற்கை !


இயற்கையால் நீ ... இயற்கைக்காக நீ !

Thursday, May 27, 2021

கடன்

கடன் வாங்கி கடை வச்சேன்
கோவிட் வந்து கடை அடைச்சேன்
கடை அடைச்சதால கடனை அடைக்கல
கடைக்காரன் கடன்காரனானேன்
கடனடைக்க கடைய தொறக்கணும்
கடைய தொறக்க கடன் வாங்கணும்
ஊரடங்கு கோவிட்டை அடக்குமோ
கடன் அடங்காமல் என்னை அடக்குமோ!

சத்தம்

சிங்கார பொன்னழகே
தாவணி பொன்மணியே
தேன்மொழி வார்த்தையாலே
என் மொழி மறந்தேனே!

மஞ்சள் கொடியழகே
சிவப்பான உதட்டாலே
கருப்பட்டி வார்த்தையாலே
நீலமாச்சு கனவுதானே!

ஊனுக்குள் கரைஞ்சவளே
உசுருக்குள் நெறஞ்சவளே
மடை தாண்டும் வெள்ளம்போலே
தடை மீறுது மோகம்தானே

கண்ணுக்குள் நீதானே
மந்தார பூங்கொடியே
என் தாரமா வந்தாலே
மூவுலகும் தூசுதானே!

சத்தியம்

வானம் சாட்சி சொல்லாதா 
காத்து சாட்சி சொல்லாதா 
கைகோத்து நடந்தத நெனச்சா 
மனசாட்சி கொல்லாதா!

மாத்தி பேச மாட்டேன்னு 
சத்தியம் போட்டு சொன்னியே 
புத்தி போன பாதையில 
சத்தியம் கெட்டு நின்னியே!

வாக்கிலே மானமென்றால்
பண்பாடு தந்த சாசனம் 
காதலே விளையாட்டென்றால்
வாழ்வில் ஏது விமோசனம் !

Wednesday, May 26, 2021

வழியே

கிளியே கிளியே 
மாஞ்சோலை கிளியே!
தனியே அழைக்குது 
உன் கரு விழியே!
காதல் பயணத்தில் 
காட்டு ஒரு வழியே!
தனியே விட்டு போனால் 
நானும் ஒரு பலியே!

அழகெல்லாம் கோர்த்து 
நடை போடும் சகியே!
வார்த்தைகளை கோர்த்து 
பாட வந்தேன் கவியே! 
பதிலென்ன சொல்வாயோ 
மனதில் சிறு கிலியே!
சரியென்று சொன்னாலே 
கெட்டி மேள ஒலியே!

மெழுகு

அலை பாயும் கண்ணால
அனல வச்சா மெல்ல 
உலையிலிட்ட மெழுகு போல
உருகி போனேன் மெல்ல !

கொள்ளி கண்ணு ரெண்டால 
கள்ளி என்ன கொல்ல
வெயில் பட்ட பனிய போல 
கரைஞ்சு போனேன் மெல்ல !

ஆரஞ்சு பழ உதட்டால
சொல்லடி ஒரு சொல்ல
மஞ்ச தாலி கட்டிகிட்டா 
தீருமடி அந்த தொல்ல !

Tuesday, May 18, 2021

சிரிப்பு

குற்றமற்ற சிரிப்பை 
கவிதை என்பேனா!
தோற்று போய் கவிதை 
எழுத மறுக்குது என் பேனா!

உன் சிரிப்பிற்கு 
உலகையே விலையாய்தர 
ஆசைதான் ... அந்த 
அதிகாரம் எனக்கில்லையே!

ஒற்றை சிரிப்பில் 
எப்படி பதுக்கினாய் 
ஒரு கோடி 
ஆக்சிஜன் சிலிண்டர்களை!

கற்பனை குதிரையின் 
சக்தியை கூட்டும் 
குளிர்ந்த எரிபொருள்!

பனித்துளி உதட்டில் 
எப்படி வைத்தாய்..
குறுநகையாய்
எரிமலையை!!

சிரிக்க சிரிக்க 
நோய் குறையுமாம்...
நீ சிரிக்க சிரிக்க  
எனக்கு காதல் நோய்
கூடிக் கொண்டே இருக்கிறதே !

Sunday, May 16, 2021

மனசு

நெருங்க சொல்லும் இளவயசு 
விலகச் சொல்லும் சிறு மனசு 

கல்லென மிதித்தவரை 
கும்பிட வைத்தது 
சிற்பியின் சிறு உளி!


அல்லி

அல்லியும்தான் பூத்திருக்கு 
சிறு குளமும் நெறஞ்சிருக்கு 
ஒம்மனசுல பூத்தேனோ
மனசெல்லாம் நெறஞ்சேனோ!

முழு நிலவும் உதிச்சிருக்கு
நிலவொளியும் நெறஞ்சிருக்கு 
ஒம்மனசுல உதிச்சேனோ
மனசெல்லாம் நெறஞ்சேனோ!


Friday, May 14, 2021

தீப்பொறி

புல்லளவு தீப்பொறி போதும் 
காட்டை எரிக்க!
நெல்லளவு நேர்மை போதும் 
நாட்டை காக்க!

Tuesday, May 11, 2021

சுவாசம்

நீ
வாசிக்கும்போதுதான்
என் கவிதைக்கு 
ஆக்சிஜன் 
கிடைக்கிறது!

Monday, May 10, 2021

ஆடு

மார்கழி குளிரத்தான் புரிய வச்ச
சித்திர வெயில நெஞ்சில எரிய வச்ச
பச்ச புள்ள கண்ணுலதான் திரிய வச்ச 
பச்ச வெறக ஓரக்கண்ணால் எரிய வச்ச
ஆசைகள அடிமனசுல கரிய  வச்ச
ஆடு போல அங்குமிங்கும் திரிய வச்ச 
நேத்து கூட கனவில் வந்து சரிய வச்ச 
புரியாத புதிர் கதய மெல்ல புரிய வச்ச 
காட்டு மேல ஆடு மேச்சு போற புள்ள 
பொட்டு வச்சு பூ முடிக்க  வாடி புள்ள!
 

போகாதே

வேசம் கட்ட தெரியாமே
பாசம் கட்டி வச்சேனே
நேசம் காட்டி வந்தாளே
மோசம் காட்டி போனாளே!

ஊர் பாக்க மணமுடிக்க 
தேர் கொண்டு வந்தேனே
யார் இவன் என்றாளே
வேர் இழந்து சரிந்தேனே!

காலம் போன பின்னாலே
காலன் வந்து நிப்பானே
காதல் நியாயம் கேப்பானே
காத்திருப்பாய் செந்தேனே!


மாட்டு வண்டி

மேக்கால  மலையோரம் 
மேகமெல்லாம் கூடுதடி!
தெக்கால வயலோரம் 
தவக்களையும் கத்துதடி! 

சேத்துவயல் காத்தடிச்சு 
அலைஅலையா பெரளுதடி! 
நாத்துவயல் ஆட்டத்துல 
ஒந்நெனப்பு தெரளுதடி !

கறுக்கருவா கண்ணால 
காளமனச வெட்டிபுட்ட!
கறுத்தகாள கனவுலதான் 
கரும்பு சாற கொட்டிபுட்ட !

பவளமணி பாசி வாங்கி 
பசுங்கழுத்தில் கட்டிடவா! 
எளநீர் காதலத்தான் 
பதநீரா ஊட்டிடவா!

Sunday, May 9, 2021

பூதம்

புழுதிக்காற்று
மொத்த ஊர் மீதும் 
கோபமோ காற்றுக்கு...
புழுதி வாரி 
தூற்றிக் கொண்டே போகிறதே!

தேர்

முகம் காணா பொழுதுகளில்
அகம் வாடிப் போனேன்

குட் டி உறக்கத்தில் 
கனவாய் நுழைந்திடவா 

அரும்பு இதழிலே 
குறு நகையாய் வந்திடவா 


Thursday, May 6, 2021

போகிறாள் அவள்

போகிறாள் அவள் !!
================
காதல் குளத்தில் காலாட்டிக் கொண்டே
இயல்பாய் கல்லெறிந்து விட்டு எழும்
அதன் அலைகளில் கால்நனைத்துக் களவாடிப் போகிறாள் அவள் !

பார்த்தவுடனே பார்வையைப் பறிக்கும் மின்சார மின்னலாய்
விழி அம்புகளில் ஆலமை அதிகமாய்த் தடவி
என் இதயத்தைக் குறிவைத்து எய்தி
அதை ஆறாத காயக்களமாக்கிப் போகிறாள் அவள் !

ஆழமான ஆழியிலே பிறந்த வெண்சங்காய்
உயர்ந்திருக்கும் அவள் கழுத்தின் பக்கத்து நுனியில்
அழகான கேள்விக்குறியாய் வ(வி)ளைந்திருக்கும்
மாந்தளிர் செவியின் உத்திரத்திலே துளையிட்டு
தூக்கிலிட்டு தொங்கிச் சிணுங்குகின்ற சிமிக்கியாய்
என்னை துக்கத்தில் தவிக்கவைத்து போகிறாள் அவள் !

பஞ்சுப் பாதம் மண்மீது ஜதி சொல்லி கொஞ்சி நடக்கையில்
வழியில் ஓர் ஜீவனின் வாழ்வையும் வஞ்சிக்கக்கூடாதென
மிகுந்த எச்சரிக்கையாய் மிதிபடாது மென்மையாய்
பாதைக்கு நல்ல பண்ணிசைத்து சுரம் சேர்க்கும்
மலர்ப்பாதம் முத்தமிட்டே மயங்கிக் கிடக்கும் அவளின்
வெள்ளிக் கொலுசொலித்து என்னை மயக்கிப் போகிறாள் அவள் !

முற்ற முற்ற தலைக்குனியும் செவ்வாழையாய்
படிக்க படிக்க அறிவூறும் அரிய புத்தகமாய்
கதிர் பெருகப் பெருக தலைசாயும் நெற்கதிராய்
வீதியில் வெண்பற்களைக் காட்டி சிரிக்கும் குழல் விளக்காய்
கருங்கோரைப் பயிரெனவே மயிர் வளர்ந்திருக்கும் தலையில்
நடுவெள்ளை வரப்பாய் உச்சிவரை நேர்வகிடெடுத்து தலைகவிழ்ந்த தாமரையாய் தலைக்குனிந்து போகிறாள் அவள் !

அசுரமாய் வீசிடும் கடும் சூறைக்காற்றில்
ஆலமரமே அடிவேரோடு சாய்ந்தாலும்
சமயோசிதமாய் சிந்தை கொண்டு செயல்பட்டு
சாதுர்யமாய் சூழ்நிலையைச் சமாளிக்கும்
ஆற்றுமேட்டில் அழகாய் காற்றசைத்தால் ஆடி நிற்கும்
நாணலெனவே நடை பயின்று நடந்து போகிறாள் அவள் !  

மென்மையாய் பணிவு போர்த்திய பெண்மையாய்
வானவெளியில் காற்றடிக்கும் திசையெல்லாம்
கலைந்து போகும் வெண்மேகமாய் என்னைக் கடந்து
வேகமாய் வீசும் காற்றிலே குழம்பித் தவிக்கும்
திசைக்காட்டியாய் என்னை அலைகழித்துப் போகிறாள் அவள் !

காய்ந்திருக்கும் பருவச் சுள்ளிகளை சேகரித்து
அன்பிருக்கும் காதல் பொறிகளை கண்களால் உரசி விட்டு
புகைந்திருக்கும் தீயை துப்பட்டாவால் விசிறிவிட்டு
நெஞ்சுருகும் நெய்யூற்றி அனல் கொழுந்துகளை வளர்த்து விட்டு
துடித்திருக்கும் என் இதயத்திற்கு இதமாய்த் தீ மூட்டிவிட்டு
பதமாய்க் குளிர்காயச் சொல்லிப் போகிறாள் அவள் !

விழிதடாகங்களைச் சுற்றி வட்டமிடும் கருவண்டு கண்களுக்கு
நீள்வட்டமாய் நாள்தோறும் அவள் பூசிடும் கார்மையென
ஆளில்லா நள்ளிரவில் குவிந்திருக்கும் கும்மிருட்டில்
முதன்முதலாய்த் திருடத் துணிந்து வீடு புகும்
பழக்கமில்லா திருடனின் கைகளைப் போல 
என் உள்ளம் நடுங்கவைத்து போகிறாள் அவள் !

காக்கைகளும் குருவிகளும் கூட்டமாக அமர்ந்து
காலைநேரத்தில் கூடிக்கூடி மும்முரமாய் ஊர்க் கதைகள் பேசும்
கனமான மின்கம்பி கடத்துகின்ற மின்சாரமாய்
கணப்பொழுதில் என்னைக் கடத்திப் போகிறாள் அவள் !

உயிர்த்திரியை உயரமாய் உயர்த்தி விட்டு
காதல் தீபம் அதன் தலையில் ஏற்றி வைத்து
தன்னைச் சுற்றி இருளில் தவிப்போருக்கு
மெய் உருகி உருகி வெளிச்சம் அளிக்கும்
மெழுகுவர்த்தியாக என் உயிர் உருக்கிப் போகிறாள் அவள் !

பின்னால் பின்னல்களாய் கைகோர்த்துக் கொண்டு
குதூகலமாய் ஓடி விளையாடும் பள்ளிப் பிள்ளைகளைப் போல
தட தடவெனவே சத்தமிட்டு குலுங்கி குலுங்கி
தடதடக்கும் இரு தடங்களில் கால்பதித்து
விரைந்தோடும் இரயில்வண்டி போனதுமே நசுங்கும்
ஒற்றை வெள்ளி நாணயமாய் என்னை நசுக்கிப் போகிறாள் அவள் !

அவள்  இருக்கும் திசையே என் ஆசைச் சூரியன்
தினம் உதிக்கும் காலை கிழக்கென
நிதம் எனக்கு உணர்த்திப் போகிறாள் அவள் !
வரும் ஒளி குவிக்கும் அடியாய்
அவள் நினைவுகளை சுமக்கும் ஜாடியாய்
கரிக்காத காதல் கடலுக்கு மூடும் மூடியாய்
என்னை நினைக்க வைத்து நீங்கிப் போகிறாள் அவள் !

நிறம் கருத்து உடல் பருத்து செம்மாந்து நிற்கும்
பேரலங்காரத்துடன் உலா வரும் பட்டத்து யானையைப் போல
இருக்கும் கரு(டு)ம் பாறையின் மீது பட்டுத் தெறிக்கும்
உயர்மலையின் மேலிருந்து வீழும் வெள்ளருவியைப் போல
என் நெஞ்சில் பட்டு சிலிர்க்கும் சாரல்களாக சிதறிப் போகிறாள் அவள் !

கைதொட்டால் அகம் மகிழும்
நாசி முகர்ந்தால் மனம் நிறையும்
உடல் பூசினால் பனிச்சிகரமென குளிரும்
பரவுகின்ற மேனியெங்கும் மணம் வீசும்
செங்குருஞ்சி மலைப்பிறந்த சந்தனமென எனது
உள்ளமெல்லாம் நல்வாசம் வீசிப் போகிறாள் அவள் !

தேடுவோருக்கு ஒன்றுமே தட்டுப்படாத
மனம் குழப்பும் சிந்தனைக்கும் மட்டுப்படாத
புரியாத புதிராக அவிழாத முடிச்சுகள் போடும்
பனிக்கால குளிர்க்காற்றைப்போல புத்தி குடையும்
தடயமில்லாத குருதி வழியும் உயிர்க்கொலையைப் போல
என் உள்ளத்தை தடயமின்றி கொன்றுவிட்டுப் போகிறாள் அவள் !

தொட்டால் சுடுகின்ற நெருப்பில்
பட்டால் பொசுங்கும் பஞ்சாய்
விட்டால் மீதமாகும் சாம்பலாய்
என் மனதை சுட்டெரித்துப் பொசுக்கிப் போகிறாள் அவள் !

விழிகள் நூறு வினாக்கள் பார்த்ததும்
சலனங்கள் நூறு சிந்தையில் சுமந்து
நித்தம் நன்றாய் எழுதவும் வகையின்றி
மடித்து வைத்து விரைவாய் வெளியேறவும் மனமின்றி திணறும்
வகையாய் விடையளிக்க விருப்பமின்றித் தவிக்கும்
கடின வினாத்தாளைக் கண்ட ஒரு சராசரி மாணவனைப் போல
விழியால் மட்டும் பேசி விடைசொல்லாது விலகிப் போகிறாள் அவள் !

எழில்நிலவை எட்டிப் பிடிக்கும் ஏக்கத்தில்
நாளெல்லாம் உழைத்துக் களைத்து விட்டு
கொல்லைப்புறக் கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து
கவலையுடனே கால் நீட்டிப் படுத்துக் கொண்டு
ஏங்கித் தவிக்கும் ஏதுமற்ற ஓர் ஏழையைப் போல
என்னை ஏங்கவைத்து போகிறாள் அவள் !

உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் நல்லதென்று
அன்புடனே அவசியமாய் அம்மா அள்ளிப் போட்டாலும்
மறக்காமல் ஒதுக்கி வைக்கும் பொங்கல் மிளகாய்
என்னைத் தள்ளிவைத்து போகிறாள் அவள் !

காதல் பயிருக்கு பூவேலி போட்டு
பறந்து வரும் பறவைகளை நேரம் பார்த்து
ஏமாற்றவே வைக்கோல் கைவிரித்துக் காத்திருக்கும்
சும்மாவே சிரிக்கும் சோளக்காட்டு பொம்மையைப் போல
என்னை கனவுக் காட்டுக்கு காவல்வைத்து போகிறாள் அவள் !

மனதில் உறுதியாய் கட்டிவைத்த காதல் கோட்டையை
கணப்பொழுதில் கடைக்கண் ஓரத்தில் கண்ணியைப் புதைத்து
தரைமட்டமாக்கி விட்டு சந்தோஷத்துடனே
வந்த காரியம் முடிந்ததென கைத்தட்டிக் கொண்டு
என்னை கலங்க வைத்துப் போகிறாள் அவள் !

காட்டில் மாட்டைத் தொலைத்த மேய்ப்பனுக்கு
தன் தலைத்திரும்பும் திசையெல்லாம்
தவறிய அதன் மணியோசை தவறாமல் கேட்பதைப் போல
என்னுடனே அவள் இல்லாத வேளைகளிலும்
இதயக்கூட்டில் அவளின் நினைவோசை நீங்காமல்
கேட்கவைத்து கரையாமல் போகிறாள் அவள் !

சிவந்த ஞாயிறு கதிரொளி பட்டு உருகும்
சுள்ளென மேனி தொட்டால் உரைக்கும்
பச்சைப் பசும்புல் தலைத்தூங்கும்
குளிர்மார்கழிப் பளிங்குப் பனித்துளியைப் போல
குளிர்நிலவு பார்வையில் என்னை உருகவைத்து போகிறாள் அவள் !

சாலையோரம் சாயாமல் சிலையாகவே நிற்கும்
என்றுமே தல(ட)ம் மாறாத தளிர்களாக வளர்ந்திருக்கும்
தண்டின் நடுவில் சிறு சதுரமாய் இடம் வெட்டி
அதில் நிரந்தரமாய் கார்வண்ண எண் பொறித்த
உயர்மரமாய் என்னைக் காக்கவைத்து போகிறாள் அவள் !

ஊரின் எல்லையில் கேட்க நாதியற்று தனியாக நின்றிருக்கும்
ஊரின் பெயரை தன் தலையெழுத்தே என்று சுமந்திருக்கும் 
சாய்ந்து சரிந்து போய் சிதைந்து கிடக்கும்
இரட்டைக் கால் தாங்கும் ஒற்றை ஊர்பலகையாய்
என்னை அவளின் நினைவுகளை நெஞ்சப்பலகையில்
சுமக்கவைத்து நிற்கதியாய் என்னை நிற்கவைத்துப் போகிறாள் அவள் !

பார்வைப் புயல்களை வீசி நடு நெஞ்சில் நங்கூரமிட்டு
பருவத்தின் ஆரவாரப் பரிவர்த்தனைகளோடு
என் மீது உயிர் பறிக்கும் பெரும்படை திரட்டி
போரிட்டு உள்ளத்தை போர்களமாக்கிப் போகிறாள் அவள் !

என் ஆசை அறிந்திருந்தும்
என் விருப்பம் தெரிந்திருந்தும்
என் உள்ளம் புரிந்திருந்தும்
காதல் வெள்ளம் உள்ளங்களில் கரைபுரண்டிருந்தும்
முள் மூடிய கள்ளியாய் மனதை மறைத்துப் போகிறாள் அவள் !

ஒளிநிலவும் குடைபிடிக்கும் கனவுக்காதலியே !
நான் என் வாழ்வின் விடியலுக்காய்
உன் திசைநோக்கிப்  பார்த்திருக்கிறேன்
மழைமேகம் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
பாளமாய் வெடித்த செம்மண் நிலமாய்
பூம்பாவை பதிலுக்காய் பூத்திருக்கிறேன்

உள்ளங்கால் பாதம் 
தரையில் பட்டதுமே
கொதித்து எழும்பும் காயக் கொப்புளங்களைத் தரும்
கோடைசாலையாய் நித்தம் கொதித்திருக்கிறேன்

பகலெல்லாம் புல்லும் காய்ந்த வெட்டவெளியில்
வீணாகக் காய்ந்துவிட்டு மனமின்றி மலைமறையும்
மாலைமேற்கு அடர்மஞ்சள் சூரியனைப் போல
நான் மனம் மயங்கிக் கிடக்கிறேன்

உன் விருப்பவினா தெரியாமலே
என் காதல் தேர்வை எழுதிவிட்டேன் நான் 
வெறுப்பில் கோபமாய் கிழித்தேறிவாயோ? - இல்லை நீ
விருப்பமாய் என் வாழ்க்கை விடைகளை மதிப்பிடுவாயோ?
உன் முடிவுகளை எதிர்நோக்கி தினம் தினம்
கண்ணுறங்கா மாணவனாய் காத்திருக்கிறேன்

எப்போதும் போகிறாய் என்னை வேண்டுமென்றே நீங்கிவிட்டு
எப்போது வருவாய் என் வாசல் உன் மலர்ப்பாதம் தொட்டு...     

Monday, April 26, 2021

நீ சொந்தம்

கவிதையின் பொருள் 
கவிஞனுக்கே சொந்தம் 
அந்த கவிதையே
நீயானால் 
நீ யாருக்கு சொந்தம்!
 

எங்கே ஆக்ஸிஜன் ?

 விரல் நுனியில் 

உலகம் !


எங்கே ஆக்ஸிஜன் ?

அதர்மம் வேகாதோ !

 


நேர்மையின் பாதை 

தனிவழி ஆனதோ !

ஊழலின் பாதையில் 

ஊர்கூடி நடக்குதோ !


அன்பு கொண்ட மனங்கள் 

அறைக்குள் எரியுதோ  !

ஆசை கொண்ட எண்ணங்கள் 

சாலையில்  திரியுதோ !


தர்மத்தின் ஆசானுக்கு

தவறுகளுடன் நேசமோ !

வேதத்தின் ஊற்றில் 

விஷத்தின் வாசமோ !


பணமே இங்கு 

நாட்டை ஆளுதோ !

ஓசோனின் ஓட்டையில் 

அதர்மம் வேகாதோ !

Saturday, April 24, 2021

காற்றும்

கடந்து போகும் காற்றும்
காதல் ஜூரம் கொள்ளும் 

Friday, April 23, 2021

ஐன்ஸ்டீன்களை தேடும்

 ஐன்ஸ்டீன்களை தேடும் 

ஆப்பிள் மரங்கள் !


புத்தர்களை தேடும் 

போதி மரங்கள் !


வியர்வை பூக்களை தேடும் 

மைதான புற்கள் !



மூடிய கதவுகள் திறக்குமோ ...

அறிவு பசியாற அழைக்குமோ !

கவிதை பெண்ணே !

 நீயே என்று 

நானும் சொல்லேன் !


நானா என்று 

நீயும் கேளாய் !


என் கவிதைக்குள் 

ஓடும் கவிதை பெண்ணே !


பலரும் கேட்டு 

சலித்தார்கள் !


நானும் தேடி 

சலித்தேன் !


என் 

கவிதைக்குள் ஓடும் 

கவிதை பெண்ணே ...


நீ யார் !?

பாடாமல் வேறென்ன எனக்கு வேலை !

விழியோர கவிதைகள் 

விழிகளும் கார்த்திகை அகல்களோ - விண்ணில் மின்னும்  அகல்களோ !

பார்த்தன் கையேந்தும் நாணும் - அவள் புருவம் கண்டு நாணும் !

காமன் மலர்கணைகள் அஞ்சும் - அவள் விழி அசைவிற்கு அஞ்சும்  !

அவள் பார்வையில் பூக்குது ஊதாப்பூ வண்டு வந்து தினம் ஊதா பூ !

நெஞ்சில் பூக்க வைத்தாள் காதல் பூவை கண்களில் பூ விரித்த அந்த பூவை !

வந்தது மயிலொன்று எனை நாடி அதன் கண்களில் துடிக்குது எந்தன் நாடி !

விழியிரண்டும் வீசுது கூர் வேலை கவிதையில் வடிப்பதே என் வேலை !

Friday, April 16, 2021

என்றும் நீ என் எல்லையே !

 முகம் காட்டு என் முல்லையே !

கனவில் நீ தரும் தொல்லையே !

உனைப்போல் துணை இல்லையே !

என்றும் நீ என் எல்லையே !


உந்தன் நரம்பில் ஓடுது 

எந்தன் உதிரமே !

கொஞ்சு மொழி சொல்லாதோ 

உந்தன் அதரமே !

உந்தன் கொஞ்சு மொழியே 

டீக்கு மதுரமே !


பூவில் சின்ன பூவில் 

ஒரு பூ பூத்ததோ 

தோளில் எந்தன் தோளில்

அது பண் பாடுதோ !


பழங்கஞ்சி குடிச்சாலும் 

வெங்காயம் கடிச்சாலும் 

தீராத பசியெல்லாம் 

உன் மடியில் தீருமடி !

Wednesday, April 14, 2021

தொடங்கியது மழைக்காலம் !!

 வண்ணத்து பூச்சியின் 

வண்ணங்கள் குலையுது ...


தண்ணீர்ப்பாம்பு 

தவளையை தேடுது ...


நீரில் நாற்று 

மிதக்குது ...

கண்ணீரில் உழவன் 

கண்ணும் மிதக்குது ...


கூரையில் சொட்டுது  

நீர்த்திவலை  

சேர்த்து வைக்குது 

ஏழையின் வீட்டு 

தவலை 


குயவன் வலைந்த 

மண்பானை 

நீந்துது சிறு 

தலைப்பிரட்டை ..


தொடங்கியது மழைக்காலம் !!

உன் இதழில் போதை பருகவா

டாஸ்மாக் போறத நிறுத்தவா 

உன் இதழில் போதை பருகவா 

ஊருக்குள் நீ செம கட்டையே ...

உன்னை கண்டா நானும் மட்டையே 


பொன்னாரம் சூடும்  பூவொன்று 

இந்நேரம் மார்பில் ஆடாதா  

செந்தூரம் சூடும் பூவொன்று 

நெஞ்சோரம்  ராகம் பாடாதா ! 


உள்ளங்கையில் உலகம் 

எட்டி நிற்கும் சொந்தம் 

வீடு தேடி வரும் வசதி 

மனதில் கூடி வரும் அசதி 


கவசமே பாடினாலும் 

கவசமே போட்டாலும் 

விதிவசமே வாழ்வு 

காதல் நோயில !!

அரசாங்கமும் 

எச்சரிக்கை செய்யல ..

காதல் எதிர்ப்பு சக்தியும் 

எனக்கு இல்ல ...

லவ் ஷீல்டோ லவ் வாக்ஸினோ 

நானும் போடல ...

ஒன்ன பாத்தபின் நானும் 

காதல் நோயில !!

Tuesday, April 13, 2021

கொரோனாசூடி

அச்சம் தவிர்
ஆவி பிடி
இஞ்சி சேர் 

சித்திரை

வந்திடு சிங்கார சித்திரையே
கொடுமைக்கு கொடு மாத்திரையே 
துடைத்திடு  விழியின் நீர்த்திரையே     
நீக்கிடு எங்கள்  முகத்திரையே
போகணும் பள்ளிக்கு யாத்திரையே
படைக்கணும் சாதனை முத்திரையே
தந்திடு நிம்மதி நித்திரையே

சித்திரை


பச்சை சேலை கட்டி 
கண்ணில் வண்ணம் தீட்டி 
காதல் எண்ணம் கூட்டி
சித்திரை மகளே வா 
புன்னகை பூவாய் வா

மனதின் காயங்கள் ஆற்றிட 
மனிதம் ஏற்றம் பெற்றிட 
புவியின் வளங்கள் காத்திட 
சித்திரை மகளே வா 
இனிய வேனலாய் வா 

வேதனை சாதனை ஆகிட
ஓங்கிய சிந்தனை ஊறிட 
துன்பத்தை நிந்தனை செய்திட 
சித்திரை மகளே வா 
சீரிய துணையாய் வா 

ஏழ்மையை சருகாய் எரிக்க
தீமையை  காலால் உதைக்க 
கயமைகள் கலங்கி ஓட 
சித்திரை மகளே வா 
சுழலும் புயலாய் வா 


Monday, April 12, 2021

எனக்கென்ன ஆச்சு

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

கூட்டத்தில் நானும் தனிமையில் 
தனிமையில் உந்தன் கனவினில் 
கனவினில் கண்ட இனிமையில் 
இனிக்குது காதல் இளமையில் 

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

பின்னிய கூந்தல் கலைக்கிறேன் 
கலைத்ததை மீண்டும் பின்னுறேன் 
பின்னும் உணர்வில் தவிக்கிறேன் 
தவிப்பில் எதையோ ரசிக்கிறேன் 

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

உந்தன் நினைவுகள் மூச்சிலே 
மூச்சை மறக்குமோ இதயமே 
இதயம் துடிப்பது கேட்குதே  
கேட்கும் பாடம் மறக்குதே  

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

என்னதான் ஆச்சு உயிருக்கு 
உயிரில் ஏதோ கலக்குது 
கலந்தது என்னை மயக்குது 
மயக்கத்தில் ஏதோ மாறுது

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு 

அடி எண்ணியே பாதம் நடக்குது
நடக்கையில் சேலையும் சிக்குது 
சிக்கின மனசும் தவிக்குது - இந்த 
தவிப்புதான் மனச  உருக்குது   

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

கல்லூரி பாடமும் புரியல 
புரிஞ்சதும் மனசுல நிக்கல 
நிக்குற நீயும் மனசுல 
மனச வாட்டுற தீயில   

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

ஒன்ன பாக்காம எனக்கும் பசிக்கல 
பசிக்குது சாப்புட பிடிக்கல 
பிடிச்சது எதுவும் பிடிக்கல  - உனக்கு  
புடிக்காம போனா நான் இல்ல 
 
எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

உந்தன் வார்த்தையே அறிவியல் 
அறிவில் நீயெந்தன் உயிரியல் 
உயிரில் ஏதோ மின்னியல் - அந்த  
மின்னியல் மாற்றுது என் இயல் 

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு

மனசும் பித்தத்தில் அலையுதோ  
அலையும் நினைவுகள் அடங்குமோ   
அடங்காம போனா ஏங்குமோ  
ஏக்கத்தில் உசிரு வாடுமோ  

எனக்கென்ன ஆச்சு காதலுன்னு  பேச்சு


அன்பு



சிக்கி முக்கி கல்லு ரெண்டு 
முட்டிக் கொண்டது 



பொன்னை உருக்கி வைத்த சிலையோ 
என்னை உருக்க வந்த கலையோ 

உயிரோடு உடலுக்கு உள்ள சொந்தம் 
உன்னோடு எனக்கும் அந்த பந்தம் 

Saturday, April 10, 2021

சொல்லுங்களேன்

 


பிரபஞ்சத்திற்கு 

எல்லையில்லை என்கிறீர்கள் 

தாயின் அன்பிற்கு 

ஏது எல்லை என்றும் 

கொஞ்சம் 

சொல்லுங்களேன் !!


தென்னங்கீற்றும் 

தென்றல்'காற்றும் 

சொல்லாத காதலையா 

நீங்கள் 

சொல்லிவிட போகிறீர்கள் !



======

நீ வரும் நாள்'திருநாளல்ல ..

நீ வரும் நாளெல்லாம் திருநாள் !!


பார்க்க மறுத்தால் 

கண்மணியாய் வருவேன் ...

நினைக்க மறந்தால் 

கனவாய் வருவேன் ...

கூட்டி செல்ல மறந்தால்  

நிழலாய் வருவேன் 

தோள் சாய மறுத்தால் 

தென்றலாய் வருவேன் 

உன்னை சுற்றி யாவும் நானே 

எப்படி மறுப்பாய் !!






சீண்டுகிறான் காமன் ...

 காதல் மழை பொழிகையில் 

நாணக்குடை எதற்கோ !


காதல் வழி சாலையில் 

வேகத்தடை எதற்கோ !


நீ பாராமுகமாய் இருந்தாலும் 

உன் வளையோசை அழைக்கிறதே !


நீ அணிந்த பின்பு 

அழகு போட்டி நடக்கிறது 

உன் கூந்தல் பூக்களுக்கும்  

தாவணி பூக்களுக்கும்! 


உன் பேரை சொல்லி 

அவ்வப்போது வந்து 

சீண்டுகிறான் காமன் ...

சேர்ந்து போர் தொடுக்கலாமா 

அவனிடம் !!


உன்னை காதலிக்கிறேன் 

என்கிறார்கள் ..

எனக்கல்லவா தெரியும் 

நான் காதலை காதலிக்கிறேன் 

என்று !!

Friday, April 9, 2021

கண்டா வர சொல்லுங்க

கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 


கண்டா வர சொல்லுங்க 

கையோட கூட்டி வாங்க 


கேட்டுத்தான் வந்தாரய்யா ஓட்டு கேட்டுத்தான் வந்தாரய்யா 

கேட்டுத்தான் வந்தாரய்யா ஓட்டு கேட்டுத்தான் வந்தாரய்யா 

ஓட்டு வாங்கி ஜெயிச்ச மண்ணு காணாமத்தான் தவிக்குதிங்கு 


கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 


டீயெல்லாம் போட்டாரப்பா துணியெல்லாம் தொவச்சாரப்பா 

டீயெல்லாம் போட்டாரப்பா துணியெல்லாம் தொவச்சாரப்பா 

தோச சுட்டு தந்தாரப்பா 

பாசமுண்ணு நெனச்சோமப்பா


கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 


மழையில நொந்த போதும் கண்டதில்ல 

வெயில்ல வெந்த போதும் கண்டதில்ல 

ஓட்டு வாங்கி போனான் பாரு 

கேள்வி கேட்கத்தான் நாதியில்ல 


கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

அவர கண்டா வர சொல்லுங்க 

MLA வ கையோட கூட்டி வாங்க 

Thursday, April 8, 2021

அவள் காதலை சொன்னாள்

பூக்களும் என்னோடு நடக்கிறதே 
வானவில் கைகோர்த்து சிரிக்கிறதே 
வெண்ணிலா தோள்களை தழுவிடுதே 
பட்டாம்பூச்சியாய் இதயமும் பறக்கிறதே 

விழிகளில் ஜீவன் துடித்திடும் 
இமைகளும் சாமரம் வீசிடும் 
இரவுகள் அனலை வீசிடும் 
கனவுகள் பனியை பொழிந்திடும் 
மோகத்தில் என்னை கோர்க்கவா ...
மோனத்தில் என்னை சேர்க்கவா  
மேகமே தாகம் தீர்க்கவா (பூக்களும்)

நெஞ்சணை பஞ்சணை ஆகிடுமா 
வஞ்சனையின்றி சுகம் தருமா 
முத்தத்தில் சத்தமும் கேட்டிடுமா 
ரத்தத்தின் நாளமும் உடைந்திடுமா 
உன்னிடம் என்னை பூட்டவா 
உயிரினில் ராகம் மீட்டவா 
காதலின் உச்சத்தை காட்டவா (பூக்களும்)

கேட்பதில்லை

 கனவில் உன்னை 

காணும்போதெல்லாம் 

வேண்டுகிறேன் ...

இரவே கொஞ்சம் நீண்டு விடு !


கூர்க்காக்களை 

காணும்போதெல்லாம் 

வேண்டுகிறேன் 

இரவே சீக்கிரம் விடிந்து விடு !


என் நலமோ ..

பிறர் நலமோ ..

இறைவன் இரண்டையும் 

கேட்பதில்லை !!

பனிநீர் துளியே வாராய் !

 மாதவியை தேடும் கோவலனல்ல ..

மறந்து போகும் நளனுமல்ல ...

தீக்குளிக்க சொல்ல ராமனுமல்ல ...

கோபியர் கொஞ்சும் கண்ணனுமல்ல ...

இதயம் தேடும் காதலன் !



விண்ணும் முரசு கொட்டும் 

வானவில்லும் தோரணம் கட்டும் 

மண்ணும் வாசம் பெறும் 

சிறுபுல்லும் தாகம் அறும் 

மின்னல் ஒளியை தூவும் 

பனிநீர் துளியே வாராய் !

வாளாவிருந்தது ஏனோ ?

 அறியாமல் வரும் ஆபத்தை 

அனிச்சை செயலாய் 

அறிவிக்குமாம் மூளை ..

நீ வரும்போது மட்டும் 

வாளாவிருந்தது ஏனோ ?

எத்திசையில் எங்கே போவேன்

முகிலை பார்க்க போறேன் 

வானவில்லில் ஏறி போறேன் 

மலை முகட்டை பாக்க போறேன் 

தென்றல் தேரேறி போறேன் 

தொடுவானம் பாக்க போறேன் 

அலையில் ஏறி போறேன் 

பூ வாசம் தேடி போறேன் 

வண்டின் முதுகில் ஏறி போறேன் 

உன்னை பாக்க நானும் 

எத்திசையில் எங்கே போவேன் ?

இனிது

உந்தன் திருமுகம் காண்பது இனிது.

உந்தன் குறும்செய்தி படித்தல் இனிது.

உந்தன் கவின் மொழி கேட்டல் இனிது.

உந்தன் கனவில் மிதத்தல் இனிது .

உந்தன் மெய்ப்புறம் தீண்டல் இனிது.

உந்தன் அணைப்பில் கரைதல் இனிது.

உந்தன் அன்பில் என்னை அறிதல் இனிது.

Wednesday, April 7, 2021

அணில்

சுவரின் மேலே ஏறுது 
சுவருக்கு சுவர் தாவுது 
தண்ணீர் பைப்பில் ஏறுது
மொட்டை மாடியில் ஓடுது  

சின்ன சத்தம் கேட்டாலும் 
மரத்துக்கு தான் தாவுது 
துள்ளி ஓடும் அணிலுக்கும் 
மரமே துணைன்னு தெரியுது!!

இருள்

கருக்கொண்டது இருளில்
கல்லறையும் இருளில் 
ஆதியும் இருளே
அந்தமும் இருளே 
இருளே இயற்கை 
வெளிச்சம் செயற்கை 
இருளே நிரந்தரம் 
வெளிச்சம் சிலகாலம் 
புரியாமல் ஏனோ 
தேடுகிறோம்  விடியலை!!

அந்த பயணம்

நல்லுடை உடுத்த வேணும் 
அலங்காரம் செய்ய வேணும் 
பர்சில் பணமும் வேணும் 
பசித்திருந்தால் உணவு வேணும் 

போணுமேண்ணு

ஓடி ஓடி உற்ற செல்வம் 
ஒதுங்கி இருந்து பார்க்குமே 
கூடி கூடி கற்ற கல்வி 
தள்ளி இருந்து தவிக்குமே 
தேடி தேடி தின்ற உடம்பு 
வாடி சோர்ந்து போகுமே 
முடி நரைத்து அடி தளர்ந்து
மூப்பும் நோயும் சேருமே
வீடிருந்தும் உறவிருந்தும் 
விட்டு போக வேணுமே 
நாடி அவனை சரணடைந்தால் 
நற்கதியும் கிட்டுமே!!

மின்னலாய் பூவொன்று

 கருவிழி கண்மை 

என் ஆசையை எழுதுதே !

இரு இதழ் அமுதமெல்லாம் 

என்னை குடிக்குதே !

நித்திரையில் கனவுகள் 

என்னை எழுப்புதே !

தென்றலொன்று புயலாய் 

என்னை சுருட்டுதே !

மின்னலாய் பூவொன்று 

என்னை சாய்க்குதே !

பிரம்மன் செய்த ப்ரோட்டோடைப்

 எனக்கு பிறகுதான் 

குருவி பிறந்ததா !

நான் பிறக்கும் வரை 

மயில் நடனம் ஆடவில்லையா !

நான் பிறக்கும் முன் ரோஜா 

பூக்கவில்லையா !

தென்றல் வீசவில்லையா !

நிலாதான் வானில் தவழவில்லையா !

முறைத்தாள் அவள் ...


எல்லாம் 

உன்னை படைக்கும் முன் 

பிரம்மன் செய்த ப்ரோட்டோடைப் 

என்று அவளுக்கு  

எப்படி புரிய வைப்பேன் !

பாரதி நம்ம ஜாதிதானே !

 வேட்பாளர் 

தனது வாக்குறுதியை 

காசோலை போல் 

எழுதி தந்தாலென்ன !!


உனக்கும் எனக்கும் 

ஒரே ஊர் 

ஒரே மதம் 

ஒரே ஜாதி 

ஒரே இனம் 

ஒரே மொழி 

காதலிக்கலாமா !!


டாஸ்மாக்கை மூடி விட்டால் 

என்ன செய்வதென்று 

கலங்காதே தமிழா ..

பேஸ் புக் கமெண்ட் இருக்கு 

நல்ல வார்த்தைகளில் 

திட்டுவதற்கு !!!


தலைவரே!

என்ன திடீர்னு காக்கை குருவிக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்கணும்னு பேசிக்கிட்டுருக்கீங்க ?

டேய் ... நேத்துதாண்டா படிச்சேன் ... காக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாரதி சொல்லிருக்காராமே !

பாரதி நம்ம ஜாதிதானே !


புல்லின் தலையில் பனித்துளி !!

 


நான் மட்டுமல்ல 

இரவும் கண்ணீர் வடித்திருக்கிறது 

நீ இல்லாமல் ...

காலையில் 

புல்லின் தலையில் பனித்துளி !!


செடியில் பூத்ததென்னவோ 

வெள்ளை ரோஜாதான் ...

உன் அழகை கண்டு 

அதுவும் வெட்கத்தில் 

சிவந்து விட்டது  !!

உலகில் இத்தனை கவிதைகளா !!

 உலகிற்கு வெளிச்சம் தர 

நீங்கள் 

சூரியன் ஆக வேண்டியதில்லை ...

சூரியன் இல்லா நேரத்தில் 

விளக்காக இருங்கள் போதும் !!


நிழலின் அருமை 

வெயிலில் தெரியுமாம் ...

சூரியன் இன்றியும் 

உயிர்கள் வாழா !


தடுக்கி விழுந்து விட்டு 

தரை மீது கோபப்பட்டு 

தரையை அடித்து அழும் 

குழந்தை போல 

காதலில் விழுந்து ..

காதல் மீது கோபப்பட்டு 

கலங்கும் குழந்தை நான் !!


உன்னை 

ஒவ்வொரு முறை 

நினைக்கும்போதும் 

விண்ணில் ஒரு 

நட்சத்திரம் தோன்றுமென 

வரமளித்தான் இறைவன் ...

எண்ணி பார்த்துக்கொள் 

உன்னை எத்தனை முறை 

நினைத்தேன் என ....!!!


என் கவிதை தாள் 

காணாமல் போய் விட்டது ...

எனவே ... வாசிக்கிறேன் ...

பொங்கும் கடலலையை 

வீசும் தென்றலை 

மலை சிகரத்தை 

கொட்டும் அருவியை 

பறவை கூட்டத்தை 

சிலிர்க்கும் மழையை

மழலையின் சிரிப்பை 

தவழும் நிலவை  ..

உலகில் இத்தனை கவிதைகளா !!


வேறு யாராகவேனும் 

பிறந்திருக்கலாம் என்று 

நினைத்திருக்கிறாயா என்றாள் அவள் ...

ஒரு முறை 

பேருந்து பயணத்தில் 

பக்கத்து இருக்கை 

குழந்தையை 

நீ கொஞ்சியபோது 

நினைத்திருக்கிறேன் ...

அந்த குழந்தையாய் 

பிறந்திருக்க கூடாதா என்று !!


Tuesday, April 6, 2021

பக்தி

ஆன்மிகத்தோடு சேரும்போது 
உணவு பிரசாதமாகிறது 
பசி விரதமாகிறது 
நீர் தீர்த்தமாகிறது 
பாடல் கீர்த்தனையாகிறது 
செயல் சேவையாகிறது 
வேலை கர்மாவாகிறது 
பயணம் புனித யாத்திரையாகிறது 
வீடு ஆலயமாகிறது 
மனிதன் மகானாகிறான்!!

உன் நெனப்புனால

குறுக்க நெடுக்க 

நடந்து என்னை  

கிறங்க வச்சு 

தொலைச்சவளே ..


மண் பாத்து 

நடந்து எனக்கு 

மண்ணில் 

குழி பறிச்சவளே ...


பாத்ததெல்லாம் 

பாத்துபுட்டு 

பாக்கு வெட்டியா 

வெட்டியவளே ...


செஞ்சதெல்லாம் 

செஞ்சுபுட்டு 

மிஞ்சிக்கிட்டு 

போனவளே ...


கிறுக்கி 

உன் நெனப்புனால 

கிறுக்கா 

நானும் திரியுறேனே  ...


பக்கம் நீயும் 

இல்லாம 

பரிதவிச்சு 

உருகுறேனே ...


பாசாங்கு 

செய்யுறேன்னு 

பாவி மனச 

தேத்துறேண்டி ...


நடந்ததெல்லாம் 

நெனச்சு நானும் 

கனவிலயே 

கருகிறேண்டி ...


பாசம் வச்ச 

பய எனக்கு 

மோசம் செஞ்ச 

கொடும ஏண்டி 


வெவரம் கெட்ட 

பய எனக்கு  

வெவரமாத்தான் 

சொல்லேண்டி ..


பாடையிலே 

போகுமின்னே 

வெரசாத்தான் 

சொல்லிப்புடு ...


பசல நோயில 

போயிடுவேன் 

கொள்ளி நீயும் 

வச்சுப்புடு !!




உன் நினைவும்

இதயத்தை 

காற்று உரசும்போதெல்லாம் 

உன் நினைவும் 

உரசுகிறது !!


எத்தனை கவிதைகள் 

காகித வரியில் ...

அத்தனையும்  

டெபாசிட் இழந்தது 

உன் ஒரே ஒரு 

இதழ் வரியில்!


முனிவர்கள் 

பாக்கியம் செய்தவர்கள் ...

முக்தி பெற்றார்கள் ..

நீ பிறக்கும் முன்னே 

பிறந்ததினால் !!


நச்சரிக்குது உன் பேரை 

நினைவுகள் இன்று !

எச்சரிக்குது இதயம் அதனை 

காதல் என்று !


எப்பொழுதும் கனவில் 

கொஞ்சிடும் கிளியே 

சில பொழுதுகள் 

நிஜத்தில் தருவாயா ...

நிஜமென கொஞ்சம் 

கொஞ்சிட வருவாயா !!